• துணை டவர் கம்பேனி அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

  BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து துணை டவர் கம்பேனி அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.

   

          BSNL நிறுவனத்தில் உள்ள கோபுரங்களை பிரித்து தனி டவர் கம்பெனி உருவாக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு 15.09.2017 மதியம் 0100மணி அளவில் BSNLலில் உள்ள ALL UNIONS & ASSOCIATIONS தோழர்களும் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 • ஜாக்டோ – ஜியோ – ஆதரவு ஆர்ப்பாட்டம்.

    இன்று 14.09.2017ல்  தமிழ்நாடு ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி BSNLEU & TNTCWU இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் .

 • துணை டவர் கம்பேனி அமைக்க எதிர்ப்பு மற்றும் ஜாக்டோ – ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  துணை டவர் கம்பேனி அமைக்க எதிர்ப்பு மற்றும் ஜாக்டோ – ஜியோ ஆதரவு ஆர்ப்பாட்டம்.

        12.09.2017ல் கூடிய மத்தியகேபினட் முடிவின்படி பிஎஸ்என்எல் கோபுரங்களை பிரித்து தனி துணை நிறுவனமாக அமைக்கும் முடிவைக் கண்டித்து நாடு தழுவிய கண்டன இயக்கம் நடத்திட BSNLதொழிற்சங்கங்கள் முடிவு. மேலும் தமிழகத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழையபென்ஷன் தொடர உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளுக்காக போராடும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஆதரித்தும் கண்டன முழக்கம் செய்திட மாநிலச்சங்கம் அறைகூவல் விட்டுள்ளதால் 14.09.2017 மதியம் 0100மணி அளவில் தூத்துக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றபெற அன்போடு அழைக்கிறோம்.

 • ஜாக்டோ – ஜியோ, நீட் – ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  போராடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று 12-09-2017ல் திருச்செந்தூர் தொலைபேசிநிலையம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்.

 • SC/ST ஊழியர்களின் பாதுகாவலன் BSNLEU – மீண்டும் நிரூபணம்.

  SC / ST ஊழியர்களின் பாதுகாவலன் BSNLEU என மீண்டும் நிரூபித்தது நமது மத்தியச்சங்கம்

  Once again it is proved that, BSNLEU is the champion of SC/ST employees.

  It is once again proved beyond doubt that, BSNLEU is the champion of defending the rights of the SC/ST employees. DoP&T orders on SC/ST reservation are not fully implemented in BSNL. BSNLEU is continuously fighting for the past several years, for the implementation of DoP&T orders. As a result of BSNLEU’s efforts, orders were issued, first on 29.12.2014 , and once again on 28.07.2016, reducing the qualifying standards of SC/ST employees, for the departmental examinations. However, BSNLEU continued to press for the total implementation of the DoP&T orders on SC/ST reservation. In the 35th National Council meeting held on 11-05-2017, BSNLEU demanded implementation of DoT letter no 22-5/91-NCG dated 30-11-1992. This DoT letter is almost equivalent to the DoP&T orders on SC/ST reservation. Com.P.Abhimanyu, GS, BSNLEU, handed over a copy of that DoT letter to the Chairperson of the National Council. On reading the letter, the Chairperson immediately directed the Management Side to consider implementation of the DoT order. After the 35th National Council meeting, BSNLEU has twice written to the Management, reminding to implement the decision of the National Council. As a result of these persuasions of BSNLEU, the Corporate Management issued order today, vide letter no. 9-2/2016-Rectt dated 28-08-2017, reducing the qualifying marks of SC employees to 20% and that of ST employees to 15%, as envisaged in the DoT letter no 22-5/91-NCG dated 30-11-1992. These reduced qualifying marks are applicable from 28-07-2016. BSNLEU congratulates the SC/ST employees. BSNLEU also heartily thanks the Management for issuing the letter.<<< view letter >>> 

         BSNLEU சங்கம் தான் SC/ST ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடி வருகின்றது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

       SC/ST ஊழியர்களுக்கான DOP&T உத்தரவு முழுமையாக BSNLலில் அமுல்படுத்தப்படவில்லை. இந்த உத்தரவை அமுல் படுத்த BSNLEU மத்தியச் சங்கம் பல வருடங்களாக தொடர்ந்து போராடி வந்தது. BSNLEU மத்தியச் சங்கத்தின் முயற்சியால் 29-12-2014 மற்றும் 28-07-2016 தேதிகளின் உத்தரவுப்படி SC/ST ஊழியர்களுக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது. இருந்த போதிலும் DOP&T உத்தரவு முழுமையாக அமுல்படுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தது BSNLEU.

           டெல்லியில் 15-05-2017ல் நடைபெற்ற 35வது NJCMல் BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ DOP&T உத்தரவுக்கு சமமான DOT உத்தரவு எண். 22.05/91- NGC dated 1992ஐ NJCM அமுல்படுத்தக்கோரி கடித நகலை BSNL நிர்வாக தலைவரிடம் ஒப்படைத்தார். நிர்வாகத்தலைவரும் உத்தரவை அமுல்படுத்துவதாக உறுதியளித்தார். ஆனாலும் காலதாமதம் ஆனது. இதனால் மேற்படி உத்தரவை அமுல்படுத்தக்கோரி மேலும் இரண்டு முறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.

           நீண்ட தொடர் முயற்சியால் 28-08-2017 அன்று உத்தரவு எண் 9-2/2016-Rectt dated 28-08-2017ன்படி SC ஊழியர்களுக்கு 20% மதிப்பெண்    ST ஊழியர்களுக்கு 15% மதிப்பெண் என தகுதி தேர்வுகளுக்கு மதிப்பெண்களை குறைத்து DOT கடித எண் 22-5/91 NGC dated 30-11-1992ஐ அமுல்படுத்தி உள்ளது. இதைப்பயன்படுத்தி SC/ST ஊழியர்கள் முன்னேற வாழ்த்துகிறது.

        SC/ST ஊழியர்களுக்கு சாதகமான உத்தரவை வெளியிட்ட BSNL நிர்வாகத்திற்கும் தொடர்முயற்சி செய்து உத்தரவை பெற்றுத் தந்த மத்தியச்சங்கத்திற்கும் நன்றியுடன்வாழ்த்துக்கள்.

 • ஊதியம் வழங்காத மாவட்ட நிவாகத்தை கண்டித்து மாலை நேர தர்ணா

  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து  மாலை நேர தர்ணா.

        தூத்துக்குடி மாவட்டத்தில்  BSNL  ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017 ஜுலை மாத சம்பளம் இன்றளவும் வழங்காததை கண்டித்து தூத்துக்குடி GM அலுவலகம் முன்பு 23.08.2017 அன்று  நடைபெற்ற மாலை நேர தர்ணா போராட்டம் BSNLEU மாவட்டத் தலைவர் தோழர்.  P . பால்ராஜ் பட்டுக்குமார்., TNTCWU மாவட்டத் தலைவர் தோழர். C. பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M. ஜெயமுருகன் , TNTCWU மாவட்டச்செயலர் தோழர். E. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கிளைச் செயலர். தோழர் . ஜெயராஜ் நன்றி கூறினார் .

 • அரசு வங்கிகளில் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

  2017 ஆகஸ்ட்-22 பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்குபெரும் வேலை நிறுத்தம் !

  வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானி, மல்லையா போன்ற மலைபாம்புகள் விழுங்குவதை தடுக்க; தனியார் மயத்தை முறியடிக்க 2017 ஆகஸ்ட்-22ல் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ! 

  கோரிக்கைகள் அனைத்தும் பொது மக்களுக்கானது, வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கானது.

  வங்கி ஊழியர்கள் போராட்ட களத்தில் வைத்துள்ள கோரிக்கைகள் :..

  1. 1) வங்கி சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

  2) பொது துறை வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும்.

  3) கார்பரேட் நிறுவனங்களின் வராக்கடனை தள்ளுபடி செய்யாமல் வசூலிக்க வேண்டும்.

  4) கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  5) தள்ளுபடி செய்யப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் வராக்கடன்களை ஈடுகட்ட, வங்கி வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணத்தை அதிகரித்து வசூலிக்க  கூடாது !

  இந்த கோரிக்கைளில் எங்காவது வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் உள்ளனவா, இல்லை ; மாறாக வங்கிகளின்  கொள்ளைகளை  தடுக்க ….?

             ஸ்டேட் வங்கிகளின் கடனை வசூலிக்கும் உரிமை, தனது கடனை செலுத்தாத வராக்கடன் சலுகைகளை பெற்றுள்ள, அம்பானிகளின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் கம்பெனி, சாமான்ய விவசாயிகள் கடன் கல்வி கடன் சிறு தொழில் கடன் வசூலிப்பதில் அடியாட்களை பயன்படுத்தி மிரட்டி வசூலிக்கிறது. ஸ்டேட் பேங்குளில் கடன் பெற்றவர்கள் கடனை முழுவதும் வங்கியில் திருப்பி செலுத்தினாலும், கடன் செலுத்தி முடித்ததற்கான சான்றினை ரிலையன்ஸ் கம்பெனியிடமிருந்து மட்டுமே பெறமுடியும். வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைளில் ஒரு சிறு துளிதான் இது. இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு எதிரான பொதுமக்களுக்கு எதிரான, கார்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான போக்கை சீர்திருத்தம் என்ற பெயரில் பலமுனைகளில் அரசு எடுத்துள்ளது.

         வங்கி தொழில், கார்பரேட் கம்பெனிகளுக்கானது என்பதிலிருந்து மக்களுக்கானது என்பது மாற வேண்டுமாயின் வங்கி ஊழியர்களின் போராட்டத்தை மக்களாகிய நாம் ஆதரிப்பதே நல்லது. வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு இயக்கங்களில் பங்கெடுப்போம் !!!

 • ஜாக்டோ – ஜியோ 22.08.2017ல் அடையாள வேலைநிறுத்தம் !

  தமிழகம் முழுவதும் 22.08.2017 ஒருநாள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம். 

       பத்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்குபெறும் அடையாள வேலைநிறுத்தம் 22-08-2017 அன்று தமிழகத்தில் நடைபெறுகிறது.

  கோரிக்கைகள் :-

  1) 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமுல்படுத்த வேண்டும் !

  2) இடைக்கால நிவாரணமாக 20சதவீதம் வழங்க வேண்டும் !

  3) புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !

  4) தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உட்பட பல்வேறு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் !

            ஆகிய 4 முக்கிய  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 05ம்    தேதி சென்னையில் பேரணி நடத்திய பின் நாளை 22.08.2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துகின்றனர். கோரிக்கைகள் வெற்றி பெறாவிட்டால் 2017 செடம்பர் 07 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேலைநிறுத்தம் வெற்றிபெற வாழ்த்துவதோடு AIBDPA தோழர்கள் ஆதரவு இயக்கங்களில் பங்குபெறவும் தமிழ்நாடு AIBDPA சங்கம் கேட்டுக்கொள்கிறது.

 • 71வது சுதந்திரதின வாழ்த்துக்கள் !

  போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க 71வது சுதந்திரதின நாளில் சபதமேற்போம் !

 • தோழர். ஆர். முத்துசுந்தரம் மறைவு

  தோழர். ஆர். முத்துசுந்தரம் மறைவு

   

       மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் (வயது 66) இன்று (29.07.2017) மாலை 6 மணிக்கு, ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு தூத்துக்குடி மாவட்டச்சங்கம்  தனது அஞ்சலியை செலுத்துகிறது.

      தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி வழிகாட்டியவர் தோழர் ஆர். முத்துசுந்தரம். தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க முன்நின்று உழைத்தவர். தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக போராடியும், உச்சநீதிமன்றத்தில் வழக்காடியும், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் பணி கிடைக்கச் செய்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

      கலை இலக்கிய பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சிறந்த பேச்சாளரும், அமைப்பாளருமாவார். அரசு ஊழியர்களைத் திரட்டுவதிலும், கற்பதிலும், வழிகாட்டுவதிலும் ஆசானாகத் திகழ்ந்தார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், தமிழகம் உள்ளிட்டு அகில இந்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

     அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும்,அரசு ஊழியர்களுக்கும் , தோழர்களுக்கும் தூத்துக்குடி மாவட்டச்சங்கம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், தோழருக்கு அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.