• ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்

  01-01-2017 முதல்    ஊதியம் / ஓய்வூதியம் வழங்கக்கோரி 13.07.2017ல் நாடுதழுவிய உண்ணாவிரதம்.

          BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஊதிய / ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2வது கட்ட போராட்டம் 13.07.2017ல்  நாடு தழுவிய உண்ணாவிரதம். அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். மாவட்டச்செயலர்கள் உரிய கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.

 • நன்றி… நன்றி… நெஞ்சுநிறை நன்றி !

  தேசம் காக்க செப் 2 வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி

            தொழிலாளர், மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் 2015 செப்டம்பர் 02 ல் நடைபெற்றதில் 15கோடிக்கும் மேலான உழைக்கும் வர்க்க தோழர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி.

 • BSNL CCWF அகில இந்திய மாநாடு – கன்னியாகுமரியில்

  BSNL CCWF அகில இந்திய மாநாடு – வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் 26-07-2015

  BSNL ஊழியர் சங்கம் மற்றும்

  தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்

  நாகர்கோவில் மாவட்டம்

  14-07-2015

  BSNL CCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு

  அமைப்புக்கூட்டம்

  நாள்: 26-07-2015 ஞாயிற்றுக் கிழமை

  நேரம்: காலை 10 மணி

  இடம்: தமிழ் நாடு அரசுஊழியர் சங்க அலுவலகம்,

  டென்னிசன் சாலை, வசந்தம் மருத்துவமனை எதிரில்,  நாகர்கோவில்.

  பங்கேற்போர்:

  தோழர்கள்:

  A.V. பெல்லார்மின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

  S. செல்லப்பா, மாநிலத்தலைவர் & அகில இந்திய உதவிப் பொதுச் செயலர், BSNLEU.

  A. பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU.

  P. இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU

  M. முருகையா, மாநிலத்தலைவர் & அகில இந்திய உதவித் தலைவர், BSNLCCWF.

  C. வினோத்குமார், மாநிலச் செயலர், TNTCWU.

  C. பழனிச்சாமி, மாநில உதவிச் செயலர், TNTCWU.

  K. விஸ்வநாதன், மாநில பொருளாளர், TNTCWU.

  C. குமார், அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்,  BSNLCCWF.

  K. தங்கமோகன், மாவட்டச் செயலர், CITU.

  மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள்.

  திரளாக பங்கேற்போம்..

  அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவோம்..

  தோழமையுடன்

  A.செல்வம்                                          K.ஜார்ஜ்

  மாவட்டச் செயலர்                          மாவட்டச் செயலர்

  TNTCWU                                                     BSNLEU

 • இரயில்வேயை தனியார்மயப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து 30-06-2015ல் ஆர்ப்பாட்டம்.

  ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து

  2015 ஜூன் 30 ல் கிளைகளில் ஆர்ப்பாட்டம்

               BSNLEU டல்ஹௌசி மத்தியச் செயற்குழு முடிவின்படி 30-06-2015ல் தூத்துக்குடியில் மதியம் 0100 மணி அளவிலும் மாலையில் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் 0500 மணி அளவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

               தனியார் மயத்திற்கெதிரான போராட்டத்தில் கை கோர்ப்போம். அரசு மற்றும் பொதுத்துறைகளைக் பாதுகாப்போம்.

 • ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” கடைபிடிக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு.

  ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து

  2015 ஜூன் 30 ல் கிளைகளில் ஆர்ப்பாட்டம்

                   நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNLEU டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 • டல்ஹௌசி மத்திய செயற்குழு முக்கிய முடிவுகள்.

  16-06-2015 முதல் 18-06-2015 வரை டல்ஹௌசியில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

  Important decisions taken in the Dalhousie CEC meeting.

  The CEC meeting of BSNLEU, held at Dalhousie has taken the following important decisions. All Circle and District Secretaries are requested to take note of the decisions and to ensure their implementation. 

  1) The CEC meeting decided to call upon the entire BSNL employees to enmasse join the General Strike to be held on 2nd September, 2015, called on by the Central Trade Unions.

  2) On the non-settlement of the problems of the Non-Executives, the meeting directed the CHQ to take up the issue with the JAC for necessary trade union action, if required.

  3) The meeting called upon the Circle and District unions to vigorously implement the month long  campaign, called on by the Forum.

  4) The meeting decided that, circle and district council meetings should immediately be conducted, in circle/district where the same is not conducted.

  5) The meeting decided that all the District Secretaries should take immediate steps for the periodic conducting of the Works Committee meetings.

  6) The meeting decided that study classes should be organised by the K.G.Bose Memorial and Educational Trust. Timing, subject and centres are to be decided by the Trust.

  7) As regards Tele Crusader, the meeting decided that all the District Secretaries should immediately intimate the CHQ, the branch wise requirement of the journal.

  8) The meeting unanimously accepted the offer of the Tamil Nadu circle union to host the next All India Conference.

 • தோழர்.A.M. பாட்டீல் மறைவுக்கு வருந்துகிறோம்.

  BSNLEU குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணம்.

             ஹிமாசல் பிரதேசம் டல்ஹௌசியில் 16-06-2015 முதல் நடைபெறும் BSNLEU மத்தியச் செயற்குழுவில் கலந்து கொண்ட குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

            அன்னாரின் மரணச்செய்தி கேட்டு வருந்துகிறோம். அவர்தம் குடும்பத்தினருக்கும், குஜராத் மாநிலச் சங்கத் தோழர்களுக்கும் BSNLEU தூத்துக்குடி மாவட்டச் சங்கம் இதயபூர்வ இரங்கலை தெரிவிக்கிறது.

 • தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்.

  ஆண்டிற்கு 5கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒருபைசா கூட செலவிடாமல் திருப்பி அனுப்பும் MPக்கள்.

  FB_IMG_1432965658005

          ஒவ்வொரு ஆண்டும் எல்லா தொகுதிகளையும்  மேம்படுத்திட தேவையான வசதிகளை மக்களுக்கு செய்திட தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி மக்கள் பிரதிநிதிகளான MPக்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 

                 BJP அரசு துவங்கி ஓர் ஆண்டு முடிவில் 290க்கும் மேற்பட்ட MPக்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசாக்கூட செலவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதில் தமிழக எம்பிக்கள் 11பேர் அடங்கும்.

             பாரத பிரதமர் மோடி 16சதவீதம் மட்டுமே செலவிட்டுள்ளார். BJP அமைச்சர்கள், BJP எம்பிக்கள், திருமதி சோனியா உட்பட எதிர்கட்சி எம்பிக்கள்  என தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசாக்கூட செலவிடாது தங்களது தொகுதி மீது அக்கறையற்ற இவர்களை தேர்ந்தெடுத்த அப்பாவி மக்களை என்னவென்று சொல்லுவது…..

   

   

   

 • 2015 செப்டம்பர் 2ம் தேதி பொது வேலைநிறுத்தம்.

  CITU, AITUC, BMS, HMS உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு முடிவு,

  Tamil_Daily_News_4095836877823 (1)

           குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 15000/- வழங்கிடவும், BJP அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான முறையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றும் முயற்சியைக் கைவிடக்கோருதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 2015 செப்டம்பர் 2ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்திட முடிவு.

        CITU, AITUC, HMS, BMS  உள்ளிட்ட 13 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து நடத்திய சிறப்பு மாநாடு கடந்த 26-05-2015ல் புதுடெல்லி மாவலங்கார் மஹாலில் நடைபெற்றதில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

 • 100 கோடியை நெருங்கும் இந்திய தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை

  30-04-2015க்குள் 100 கோடியை நெருங்கும் இந்திய தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை.

          TRAI கணக்கீட்டின்படி 31-03-2015 அன்று 996.49 மில்லியன். மாதாந்திர சராசரி உயர்வு.93சதம்.

  BSNL வாடிக்கையாளர் : 77.2 மில்லியன்.

  MTNL வாடிக்கையாளர் : 3.51 மில்லியன்.

  ஏர்டெல் : 226.01 மில்லியன்.

  வோடாபோன் : 183.80 மில்லியன்.

  ஐடியா : 157.80 மில்லியன்.

  ரிலையன்ஸ் : 109.47 மில்லியன்.

  ஏர்செல் : 81.39  மில்லியன்.

  டாட்டா டெலிசர்வீஸஸ் : 66.31 மில்லியன்.

                BSNL நிர்வாகம், அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து முன்முயற்சி எடுத்தால் BSNLஐ முன்னேற்ற முடியும்.