• ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம்.

  BSNL அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியர்களால்  தமிழகம்  முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம்.

     BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் AIBDPA சார்பில் இன்று 13.07.2015 மாபெரும் உண்ணாவிரதம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து  நாடு தழுவிய  அளவில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நமது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள்  உற்சாகமாக   கலந்து கொண்டனர்.

  கோரிக்கைகள்:-
  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட் அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……

  Jpeg

  Jpeg

  Jpeg

 • அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்

  உற்சாகமாய் நடைபெற்ற  முதலாவது அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்.

       அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக அரங்கில் 08.07.2017 அன்று  உற்சாகமாக நடைபெற்றது. BSNLEU அகில இந்திய தலைவர் தோழர். பல்பீர்சிங், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். சுனில்  சௌத்திரி, தோழர். பாக்கியலெட்சுமி (கேரளா), தோழர். சர்மிளா தத்தா (கொல்கத்தா), தோழர். P. பிரேமா (தமிழ்நாடு) தோழர். பத்மாவதி (ஹைதராபாத்) கூட்டு தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பான ஏற்பாடுகளை தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலச்சங்கங்கள்  செய்திருந்தன. தெலுங்கானா மாநிலச்சங்க செயலர் தோழர். சம்பத்ராவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

        CITU மாநிலத் தலைவர் தோழர். ஹேமலதா கருத்தரங்கை துவக்கிவைத்து  துவக்க உரையாற்றினார். CITU மாநில துணைத் தலைவர் தோழர். ரமாதேவி, ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக முன்னாள் முதல்வர் உஷாதேவி, BSNLEU அகில இந்திய பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

         இந்த கருத்தரங்கில் அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனராக அருமை தோழர். P. இந்திரா  ( BSNLEU தமிழ் மாநில உதவிச் செயலர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 • இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய ரம்ஜான்   வாழ்த்துக்கள்.

 • ஊதிய உயர்வு தார்ணா போராட்டம்

  20-06-2017 வெற்றிகரமாக நடத்த அனைத்து சங்கங்களின்   கூட்டமைப்பு அறைகூவல்.

  உரிமைகளை மீட்டிட ஒன்றுபட்டு போராடுவோம்.

 • உரிமைகளை மீட்டெடுக்க போராட தயாராவோம் ! BSNL சங்கங்கள் அறைகூவல் !

  நிர்வாகத்தின் அடக்குமுறையினை எதிர்த்தும் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் களம்காண போராட்ட திட்டங்கள் அறிவிப்பு.

                    02.06.2017 டெல்லியில் கூடிய BSNL ஊழியர்  மற்றும் அதிகாரிகளின்   சங்கத் தலைவர்கள் ஏக மனதாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத் திட்டங்களை வடிவமைத்தனர்.  மேலும் BSNL அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்ட நடவடிக்கைகளை தடைசெய்ய டெல்லி பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் BSNL கார்ப்போரேட் நிர்வாகம் கடந்த 06.05.2017 அன்று தடைஆணை பெற்று அனைத்து மாநில பொது மேலாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக கடந்த 08.05.2017 வெளியிட்ட கடிதத்தையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. 

  கோரிக்கைகள்:-

  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……

  இயக்கங்கள் :-     

   A) 20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

  B) 13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

  C) 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

           இயக்கங்களை வெற்றிகரமாக்கி ஊதிய மாற்றம் பெற்றிட

  கரம் கோர்ப்போம் !

  களம் காண்போம் !!

   இயக்கங்கள் நடத்தி வெற்றி பெறுவோம் !!!

 • கிளைகளில்கண்டன ஆர்ப்பாட்டம்

  மேமாத சம்பளம் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

              உரிய தேதியில் நிரந்தர ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் தமிழ் மாநிலச் சங்க அறைகூவலின் படி தூத்துக்குடியில் 01-06-2017 மதியம் 0100 மணிக்கு மாவட்டத்தலைவர் தோழர். S. பால்ராஜ் பட்டுக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.

  கோவில்பட்டி கிளை ஆர்ப்பாட்டம்

  திருச்செந்தூர் கிளை ஆர்ப்பாட்டம்

 • Tiruchendur BSNLEU & TNTCWU Branch Confrence

 • உற்சாகமாக ஈரோட்டில் நடைபெற்ற 8வது மாநில மாநாடு.

  BSNLEU 8வது தமிழ்மாநில மாநாடு.

  துவக்க நிகழ்சியாக தேசியகொடி ஏற்றுதல்

  சிஐடியு பொதுச் செயலர் தோழர். R. கருமலையான் உரை – BSNLEU மாநாட்டில் –

  மோடியின் கனவாம்-‘டிஜிட்டல் இந்தியா’.அதற்கு அம்பானியின் சமர்பனமாம் ‘ஜியோ’ எனும் 1,50,000 கோடி முதலீட்டிலான திமிங்கலம். கையையும், கண்ணையும் கட்டிப்போட்டு விட்டு BSNL இவர்களோடு போட்டி போட்டு பிழைத்துகொள்ள ஆளும் வர்க்கம் சபித்துவிட்டது.இதை BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து எதிர்கொண்டனர். தெருத்தெருவாக சிம்கார்டு விற்பனை உட்பட சேவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவன நஷ்டத்தை குறைத்தனர். லாபத்தை நோக்கி பயணிக்க உள்ளது .பொதுத்துறை பாதுகாப்பில் புது அத்தியாயம் படைத்த BSNLஊழியர் சங்க மாநில 8வது மாநாடு. ஈரோடு. ஊதியம், சலுகைகள் மீதான விவாதித்தைவிட ‘தேசம் காக்க -பொதுத்துறை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தை மாநாடு முழுக்க கண்டேன். சிஐடியூ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

  தூத்துக்குடி மாவட்டசார்பாளர்கள்.

  மாவட்டசார்பாளர் உரை தோழர். பாலு.

  மாவட்டசார்பாளர் உரை தோழர்.ஹரி.

  19 மற்றும்  20.5.17 தேதிகளில்  ஈரோட்டில் நடைபெற்ற  BSNLEU தமிழ் மாநில மாநாடு தோழர். S. செல்லப்பா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  மாநாட்டில் தோழர் செல்லப்பா அவர்கள் மாநில தலைவர், தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளர், தோழர் சீனிவாசன் அவர்கள் மாநில பொருளாளர் ஆக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  மாநிலமாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்.

  தூத்துக்குடி மாவட்ட சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 • மே தின வாழ்த்துக்கள் !

  சபதம்ஏற்போம்….. ! 

  அனைத்துப்பகுதி உழைப்பாளிகளின் சலுகைகளை உரிமைகளை பாதுகாத்திட…. !

  விவசாயி / விவசாய தொழிலாளர்கள் வாழ்வை சீரழிப்பதை தடுத்திட….. !

  ஏழைகளின் கல்வியை கேள்விகுறியாக்கி நடைபெறும் கல்வி வியாபாரத்தை தடுத்திட……!  

  கொள்ளை போகும் கனிமவளத்தை  பாதுகாத்திட…. !

  தாண்டவமாடும் சாதிவெறி / மதவெறியை தடுத்திட…….!  

  பொதுதுறைகளை பாதுகாத்திட……. !

  இந்த மே தினத்தில் சபதம்ஏற்போம்….. ! 

  அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள் .

 • தமிழக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

  Jpeg

  விவசாயிகளின்  போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  இன்று 25.04.2017ல் தூத்துக்குடியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகளும், CITU, AITUC, LDF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் தமிழக அமைப்புசாரா சங்கங்களும் விவசாய சங்கங்களும் நடத்திடும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக BSNLEU, NFTE, AIBDPA, TNTCWU இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தை விளக்கி தோழர்கள். M.ஜெயமுருகன் (BSNLEU), M.பாலகண்ணன்(NFTE) பேசினர்.