• சிறப்பாக அமைந்த கிளைமாநாடு.

  தோழர.் பாபு ராதாகிருஷ்ணன் சங்கக்கொடியை ஏற்றினார்.IMG_20150123_105517

  வெற்றிகரமாக நடைபெற்ற தூத்துக்குடி GM அலுவலக மற்றும் CTX கிளைகளின் 10வது இணைந்த மாநாடு மற்றம் சேவை கருத்தரங்கு .

   

          23-01-2015 அன்று காலை 1030 மணி அளவில் தூத்துக்குடி பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் வைத்து தோழர்கள். S.பால்ராஜ் பட்டுக்குமார், V.ஜெயராஜ் தலைமையில் துவங்கியது.

          அதிர் வேட்டுக்கள்  முழங்க விண்ணதிரும் கோஷங்க ளுக்கிடையே தேசியக்கொடியை தோழர்.V. ஜெயராஜ், கிளைத்தலைவர் CTX, சங்கக் கொடியை BSNLEU தமிழ் மாநிலச் செயலர் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன்  ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

           அஞ்சலி உரையினை தோழர்.S.தளவாய் பாண்டியன் நிகழ்த்திட, கிளைச் செயலர்கள் தோழர். K.ஹரிராமச்சந்திரன், தோழர்.A.கோபால் ஆகியோர் வரவேற்றனர்.  

     மாவட்டச் செயலர் தோழர்.M.ஜெயமுருகன் துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் தோழர். A.பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். NFTE கிளைச்செயலர் தோழர்.ஸ்வர்ணராஜ், AIBDPA மாவட்டச்செயலர் தோழர்.P.ராமர், கிளைச்செயலர்கள்  தோழர்.M.பாலசுப்பிரமணியன், KVT. தோழர்.M.சந்திரசேகரன், TCH,   TNTCWU கிளைச்செயலர் தோழர் V.தேவதாசன்  நிர்வாகத்தின் சார்பில் DE(U&R) திருமதி. L.விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

  IMG_20150123_110130IMG_20150123_110130IMG_20150123_110130IMG_20150123_125853IMG_20150123_113250 IMG_20150123_125853 IMG_20150123_131116IMG_20150123_131116IMG_20150123_150453IMG_20150123_133541 IMG_20150123_151642 IMG_20150123_150453

            பின்னர் நடைபெற்ற சேவைக்கருத்தரங்கில் நிர்வாகத்தின் சார்பில் DGM (CFA)திரு. M.லட்சுமணப் பெருமாள், சங்கத்தின் சார்பில்  மாநில அமைப்புச் செயலர் தோழர். R.M. கிறிஸ்டோபர், மாவட்டத்தலைவர் தோழர்.T.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

       சிறப்பான உணவிற்குப் பின் பொருளாய்வுக் குழு நடைபெற்றது. ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. CTX கிளைப் பொருளாளர் தோழர்.K. கணேசன் நன்றி கூறி முடித்து வைத்தார்.

 • குடியரசு தின வாழ்த்துக்கள்

  66 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.

  25-happy-republic-day

  அனைவருக்கும் BSNLEU மாவட்டச்சங்கத்தின் 66வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

 • தூத்துக்குடியில் 22-01-2015ல் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் நூதன போராட்டம்.

  BSNLEU மற்றும் TNTCWU மாநிலச் சங்கங்களின் இணைந்த போராட்டம்.

  IMG_20150122_131903

         IMG_20150122_131844

       கோவில்பட்டியில் நடைபெற்றப் போராட்டம்.

      பிரதிமாதம் 7ம்தேதி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிடக்கோரி மாநிலம் தழுவிய “கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம்”  தூத்துக்குடியில் நடைபெற்றது.

                          BSNLEU மாவட்டத்தலைவர் தோழர்.T.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 23 பெண்கள் உட்பட 67 தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை விளக்கி BSNLEU மாவட்டச் செயலர் தோழர் M.ஜெயமுருகன், TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.S.மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

 • 22-01-2015 ஒப்பந்த ஊழியர் நூதன ஆர்ப்பாட்டம்

  TNTCWU மற்றும் BSNLEU தமிழ்மாநில சங்கங்களின் போராட்ட அறைகூவல்.

               12-01-2015ல் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுவின் முடிவின்படி தமிழ் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவேண்டிய சம்பளம் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் பலமாவட்ட செயலர்களால் பதிவு செய்யப்பட்டது. அதனை மாநிலநிர்வாகத்தின் கவனத்தில்  கொண்டுவர அனைத்து கிளைகளிலும் “கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம்” நடத்திட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக BSNLEU மாநிலச் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால்  இரண்டு சங்கத் தோழர்களும் இணைந்து நமது மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் சக்திமிக்கதாக இவ்வார்ப்பாட்டத்தை நடத்திட வேண்டுகிறோம்.

  இவண்

  தோழமையுள்ள

  M.ஜெயமுருகன்                S.மணிகண்டன்

  மாவட்டச் செயலர்கள்.

 • BSNLக்கு புதிய CMDஆக திரு. அனுபம் ஸ்ரீவத்சவா

  15-01-2015 முதல் BSNL நிறுவனத்திற்கு புதிய CMDஆக திரு.அனுபம் ஸ்ரீவத்சவா பதவி ஏற்பு.

  anupam-shrivastava-BSNL-CMD

              நீண்ட நாட்களாக BSNL நிறுவனத்திற்கென்று நிரந்தர CMD இல்லாத நிலையில் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சுணக்கம் இருந்தது.  BSLNEU சார்பிலும், FORUM சார்பிலும் பலமுறை கோரிக்கை வைத்தும் பலகட்டப் போராட்டம் நடத்தியபின் மத்திய அமைச்சரவை நியமனக்குழு முடிவு (PSEB) செய்து இன்று 15-01-2015 முதல் புதிய முழுநேர CMDஆக திரு.அனுபம் ஸ்ரீவத்சவா பதவி ஏற்றுள்ளார்.

                   2013லேயே தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டாலும் அரசியல் காரணங்களால் தடைபட்ட திரு.ஸ்ரீவத்சவா நியமனத்தை BSNLEU தூத்துக்குடி மாவட்டச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

 • 10வது கிளை மாநாடு – 23-01-2015

  BSNLEU தூத்துக்குடி GMஅலுவலகக் கிளை மற்றும் CTX கிளைகளின் இணைந்த மாநாடு மற்றும் சேவைக்கருத்தரங்கம்.

  summary_04c0cddbffef95a61634e3504798270a

  நாள்               :  23-01-2015  வெள்ளிக்கிழமை, காலை 0930 மணி.

  இடம்               :  தொலைபேசி நிலைய வளாகம், தூத்துக்குடி.

   தலைமை   : தோழர்.S.பால்ராஜ் பட்டுகுமார், கிளைத்தலைவர், GM(O) கிளை                                 : தோழர்.V.ஜெயராஜ், கிளைத்தலைவர், CTX கிளை

  வரவேற்பு   : தோழர். K.ஹரி ராமச்சந்திரன், கிளைச்செயலர், GM(O)கிளைTT.                                                                                     : தோழர்.A.கோபால், கிளைச் செயலர், CTX கிளைTT

  துவக்க உரை     : M.ஜெயமுருகன், BSNLEU மாவட்டச்செயலர், தூடி.

  சிறப்புரை  

  :தோழர். A.பாபு ராதாகிருஷ்ணன்,                                         மாநிலச்செயலர், BSNLEU.

  :தோழர்.V.P.இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU.

  :தோழர்.R.M.கிறிஸ்டோர்,

  மாநில அமைப்புச்செயலர், BSNLEU.

  • வாழ்த்துரை சகோதர  சங்க நிர்வாகிகள்.

  • அனைவரையும்  கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.

  • இவண்
  • கிளைச்செயலர்கள்.
  • தூத்துக்குடி.

   

 • பொங்கல் வாழ்த்துக்கள்

  pongal-899

  அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   

             பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொங்கலோ பொங்கல் என பொங்கலிடும் அனைவருக்கும் இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 • தமிழகத்தில் BSNL SIMகார்டு தட்டுப்பாட்டை நீக்கிடு

  BSNL ஊழியர் சங்கம் 13-01-2015ல் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல்

      தமிழகம் முழுவதும் காவல்துறை ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் CUGசிம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்கு தேவை 7.70 லட்சம். சராசரியாக மாதாமாதம் தமிழக தேவை 80ஆயிரம் சிம்கார்டுகள். வரவோ 1லட்சம் மட்டும்தான். இலக்கை பூர்த்தி செய்ய சிம்கார்டு தேவையோ பன்மடங்கு. ஆனால் BSNL கார்பரேட் நிர்வாகமோ, மாநில நிர்வாகமோ இது பற்றிய அக்கறையற்ற நிலயில் உள்ளன

       நமது மாநிலச்சங்கம் மாவட்டங்களில் ஏற்பட்ட சிம்கார்டு தட்டுப்பாட்டை உரிய முறையில் மாநில நிர்வாகம், மத்தியச் சங்கம் என்று அனைத்து மட்டங்களுக்கும் தகவல் அனுப்பியும், மத்தியச் சங்க பொதுச்செயலர் தோழர். அபிமன்யூ கடிதம் பலமுறை அனுப்பியும் BSNL நிர்வாகத்தின் போதிய அக்கறை இன்மையால் சிம்கார்டு தட்டுப்பாடு தொடர்கிறது.

      மத்திய, மாநில நிர்வாகத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்து உடனடித்தேவையை கவனத்தில் கொண்டு தேவையான சிம்கார்டுகள் வழங்கிடக்கோரி 13-01-2015 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட BSNL மாநிலச்சங்கம் அறைகூவல் விட்டுள்ளது. மேலும் DIRECTER(CM) டெல்லிக்கு FAXஅனுப்ப வேண்டுகிறது.
        BSNLவளர்ச்சியில் போதிய அக்கறையற்ற நிலையில் உள்ள BSNL நிர்வாகத்தை கண்டித்து நமது மாவட்டத்தில் அனைத்து கிளைகளிலும் சக்திமிக்க ஆர்ப்பாட்டத்தை 13-01-2015ல்சிறப்பாக நடத்திட வேண்டுகிறேன்.

  M.ஜெயமுருகன்,

  மாவட்டச்செயலர்.

  தூத்துக்குடி.

 • BSNLஐ பாதுகாக்க FORUM சார்பில் 3வது நாள் தர்ணா.

  தூத்துக்குடி மாவட்ட FOURM சார்பில் 08-01-2015 அன்று 3வது நாள் தொடர் தர்ணாப்போராட்டம்.

  170க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்ட தர்ணாப்போராட்டம் தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் FORUM தலைவர் தோழர்.L.லிங்கபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டணிச்சங்கத் தலைவர்கள் தேசத்தையும், BSNLஐயும் பாதுகாத்திட தேசம் தழுவிய  தார்ணா மற்றும் அனைத்து போராட்டங்களிலும்  தோழர்கள் கலந்து கொள்வதோடு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்ப கேட்டுக் கொண்டனர்.

  தர்ணாப்போராட்ட காட்சிகள்IMG_20150108_114041IMG_20150108_113907IMG_20150108_114302IMG_20150108_120451IMG_20150108_114003

 • நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

  06-01-2015 முதல் 7லட்சம் தொழிலாளர்கள் பங்கெடுப்பு

  நிலக்கரி சுரங்களை தனியார்மயப்படுத்தும் BJP(நரேந்திர மோடி)யின் மத்தியஅரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களான BMS, INTUC, AITUC, CITU மற்றும் HMS அறைக்கூவலை ஏற்று இந்த தொடர் வேலைநிறுத்தம் 06-01-2015 முதல் 5நாள் வீரம் செரிந்த போராட்டமாக துவங்கியுள்ளது.

  நிலக்கரி சுரங்களை தனியார்மயப்படுத்தும் மத்தியஅரசை எதிர்த்து நடைபெறும் வேலைநிறுத்தத்தை நடத்திடும் மத்தியச்சங்கங்களையும், கலந்து கொள்ளும் தொழிலாளர் தோழர்களையும் BSNLEU தூத்துக்குடி மாவட்டச்சங்கம் வாழ்த்துகிறது.