• தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்.

  ஆண்டிற்கு 5கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒருபைசா கூட செலவிடாமல் திருப்பி அனுப்பும் MPக்கள்.

  FB_IMG_1432965658005

          ஒவ்வொரு ஆண்டும் எல்லா தொகுதிகளையும்  மேம்படுத்திட தேவையான வசதிகளை மக்களுக்கு செய்திட தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 5 கோடி மக்கள் பிரதிநிதிகளான MPக்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 

                 BJP அரசு துவங்கி ஓர் ஆண்டு முடிவில் 290க்கும் மேற்பட்ட MPக்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசாக்கூட செலவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதில் தமிழக எம்பிக்கள் 11பேர் அடங்கும்.

             பாரத பிரதமர் மோடி 16சதவீதம் மட்டுமே செலவிட்டுள்ளார். BJP அமைச்சர்கள், BJP எம்பிக்கள், திருமதி சோனியா உட்பட எதிர்கட்சி எம்பிக்கள்  என தொகுதி மேம்பாட்டு நிதியை ஒரு பைசாக்கூட செலவிடாது தங்களது தொகுதி மீது அக்கறையற்ற இவர்களை தேர்ந்தெடுத்த அப்பாவி மக்களை என்னவென்று சொல்லுவது…..

   

   

   

 • 2015 செப்டம்பர் 2ம் தேதி பொது வேலைநிறுத்தம்.

  CITU, AITUC, BMS, HMS உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு முடிவு,

  Tamil_Daily_News_4095836877823 (1)

           குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 15000/- வழங்கிடவும், BJP அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான முறையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றும் முயற்சியைக் கைவிடக்கோருதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 2015 செப்டம்பர் 2ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்திட முடிவு.

        CITU, AITUC, HMS, BMS  உள்ளிட்ட 13 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து நடத்திய சிறப்பு மாநாடு கடந்த 26-05-2015ல் புதுடெல்லி மாவலங்கார் மஹாலில் நடைபெற்றதில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

 • 100 கோடியை நெருங்கும் இந்திய தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை

  30-04-2015க்குள் 100 கோடியை நெருங்கும் இந்திய தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை.

          TRAI கணக்கீட்டின்படி 31-03-2015 அன்று 996.49 மில்லியன். மாதாந்திர சராசரி உயர்வு.93சதம்.

  BSNL வாடிக்கையாளர் : 77.2 மில்லியன்.

  MTNL வாடிக்கையாளர் : 3.51 மில்லியன்.

  ஏர்டெல் : 226.01 மில்லியன்.

  வோடாபோன் : 183.80 மில்லியன்.

  ஐடியா : 157.80 மில்லியன்.

  ரிலையன்ஸ் : 109.47 மில்லியன்.

  ஏர்செல் : 81.39  மில்லியன்.

  டாட்டா டெலிசர்வீஸஸ் : 66.31 மில்லியன்.

                BSNL நிர்வாகம், அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து முன்முயற்சி எடுத்தால் BSNLஐ முன்னேற்ற முடியும்.

 • FORUMத்தின் கன்வீனராக தோழர். P.அபிமன்யூ

  13-05-2015ல் நடைபெற்ற FORUM கூட்டத்தில் ஏகமனதாகத் தேர்வு

  25_abi

          13-05-2015ல் நடைபெற்ற  FORUM கூட்டத்தில் புதிய கன்வீனராக BSNL ஊழியர் சங்க பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பணி சிறக்க தோழர். அபியை தூத்துக்குடி மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.

  13-05-2015 FORUM கூட்ட முடிவுகள்.201505141431621339886