• தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

    ரயில்வேயை தனியார் மயப்படுத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

                  BSNLEU மத்தியச் சங்க செயற்குழு முடிவின்படி 30-06-2015 அன்று மதியம் 0115 மணியளவில் தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தோழியர்களும் 43க்கும் மேற்பட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். 

    JpegJpegJpeg

    தலைமை : தோழர். T. சுப்பிரமணியன், மாவட்டத்தலைவர், BSNLEU

    போராட்டத்தை விளக்கி

    தோழர். M. ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU,
    தோழர். R.M. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU,
    தோழர்.P.ராமர், மாவட்டச் செயலர், AIBDPA பேசினர்.
    தோழர். K.ஹரி ராமச்சந்திரன் கிளைச் செயலர், GM(O) BSNLEU  நன்றி கூறி முடித்து வைத்தார்.

    IMG-20150630-WA0004

  • இரயில்வேயை தனியார்மயப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து 30-06-2015ல் ஆர்ப்பாட்டம்.

    ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து

    2015 ஜூன் 30 ல் கிளைகளில் ஆர்ப்பாட்டம்

                 BSNLEU டல்ஹௌசி மத்தியச் செயற்குழு முடிவின்படி 30-06-2015ல் தூத்துக்குடியில் மதியம் 0100 மணி அளவிலும் மாலையில் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் 0500 மணி அளவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

                 தனியார் மயத்திற்கெதிரான போராட்டத்தில் கை கோர்ப்போம். அரசு மற்றும் பொதுத்துறைகளைக் பாதுகாப்போம்.

  • BJPயின் ஊற்றெடுக்கும் ஊழல் ஆண்டு.

    BJPயின் ஓராண்டு ஆட்சியில் ஊழலின் ஊற்று.

           ஊழலற்ற ஓராண்டு  என்று மோடி அரசின் சுயவிளம்பரம் மை காய்வதற்குள் ஊழல் ஊற்று வெளிப்படத் துவங்கி விட்டது. இது பெருவெள்ளமாக பெருக்ககெடுப்பதை தடுக்க முடியாது. ஏற்கனவே பங்காரு லட்சுமணன்எடியூரப்பா  போன்றவர்களை தலைவர்களா இருந்த கட்சிதான். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது கார்பொரேட் கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து பலரை சம்பாதிக்க வைத்தவர்தான்.தற்போது அடுத்தடுத்த ஊழல் நடவடிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

                    மூத்த அமைச்சர் சுஷ்மா  சுவராஜ் தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு விசா வாங்க பணதாபிமான அல்ல அல்ல மனிதாபிமானஅடிப்படையில் உதவியுள்ளார். இவரது கணவர் லலித்மோடியின் 22 ஆண்டுகால வழக்கறிஞர். மகள் பாஸ்போர்ட் வழக்கிலேயே லலித்மோடிக்கு வழக்கறிஞர்.

                  பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில முதல்வர் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளை பறித்தவர் வசுந்தரா ராஜே..லலித் மோடிக்கு பாஸ்போர்ட் ஆவணங்களில் ரகசிய கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் நின்றாரா? லலித்மோடியின் மனைவி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போர்ச்சுகல் நாட்டு மருத்துவமனையுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

                         மத்திய கல்வித்துறை கவனிக்கும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்  ஸ்மிருதி இராணிபள்ளிக்கல்வி முடித்து விட்டு பட்டம் பெற்றதாக சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதுவும் ஒரு தேர்தலில் பி.ஏ. மற்றொரு தேர்தலில் பி,காம். என்று கொடுத்துள்ளார்.

                        மராட்டிய மாநில பா.ஜ.க.அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே 206 கோடி ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ளார்.

        கடந்த காலத்தில் ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சியின் போது முதல் முறையில் ஊழல் வெளிப்படவிலில்லை. இரண்டாவாது முறையில் தான் ஊழல் மடை திறந்த வெள்ளமாக வெளிப்பட்டது. இப்போது மோடியின் முதலாமாண்டு முடிந்து  ஊழல் ஆண்டு துவங்கிவிட்டது..

     

  • எரிவாயு உருளைக்கு அரசு வழங்கும் மானியத்தை விட்டுக் கொடுக்க பிரதமர் வேண்டுகோள்

    LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

    cylinders-med

              கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமை யல் வாயுசிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து (இந்தியில் தான்…!)

       “நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!

    [Read More…]

  • ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” கடைபிடிக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு.

    ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து

    2015 ஜூன் 30 ல் கிளைகளில் ஆர்ப்பாட்டம்

                     நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என BSNLEU டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

  • டல்ஹௌசி மத்திய செயற்குழு முக்கிய முடிவுகள்.

    16-06-2015 முதல் 18-06-2015 வரை டல்ஹௌசியில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

    Important decisions taken in the Dalhousie CEC meeting.

    The CEC meeting of BSNLEU, held at Dalhousie has taken the following important decisions. All Circle and District Secretaries are requested to take note of the decisions and to ensure their implementation. 

    1) The CEC meeting decided to call upon the entire BSNL employees to enmasse join the General Strike to be held on 2nd September, 2015, called on by the Central Trade Unions.

    2) On the non-settlement of the problems of the Non-Executives, the meeting directed the CHQ to take up the issue with the JAC for necessary trade union action, if required.

    3) The meeting called upon the Circle and District unions to vigorously implement the month long  campaign, called on by the Forum.

    4) The meeting decided that, circle and district council meetings should immediately be conducted, in circle/district where the same is not conducted.

    5) The meeting decided that all the District Secretaries should take immediate steps for the periodic conducting of the Works Committee meetings.

    6) The meeting decided that study classes should be organised by the K.G.Bose Memorial and Educational Trust. Timing, subject and centres are to be decided by the Trust.

    7) As regards Tele Crusader, the meeting decided that all the District Secretaries should immediately intimate the CHQ, the branch wise requirement of the journal.

    8) The meeting unanimously accepted the offer of the Tamil Nadu circle union to host the next All India Conference.

  • சர்வ தேச யோகா தினம்.

    21-06-2015

    சர்வதேச யோகாதினம் 

    இன்று கொண்டாட்டம்.

    FB_IMG_1434871356107FB_IMG_1434872494676

    பசி தீர்க்க வழியில்லை !!

    போகம் செய்ய நிலமில்லை !!

    தாகம் தீர்க்க தண்ணீரில்லை !!

    அடிப்படைவசதி ஏதுமில்லை !!

    மூச்சு முட்டும் வாழ்க்கையிலே

    மூச்சுப் பயிற்சி தான் தீர்வா ???

    IMG-20150621-WA0006IMG-20150621-WA0005IMG-20150621-WA0004வாட்ஸ் அப்பில் சுட்டது.

     

  • அநியாய வட்டி விகிதத்தை அனுமதியோம் – சென்னை சொசைட்டியில்

    வட்டி உயர்வை கைவிடக்கோரி சொசைட்டி உறுப்பினர்களிடம் கையெழுத்து இயக்கம்.

                   சென்னை தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த 15-06-2015 அன்று சென்னையில் கூடியது. நகைக்கடன் நீங்கலாக மற்ற அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 14.5 சதத்திலிருந்து 16 சதமாக உயர்த்திடவும் அதனை 01-07-2015 முதல் அமுல்படுத்திடவும் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

              ரூபாய் 5லட்சத்திற்கான வட்டி ரூ.6040/- லிருந்து ரூ.6670/- ஆகவும், ரூ. 6 லட்சத்திற்கான வட்டி ரூ. 7250/- லிருந்து ரூ.8000/- ஆகவும் உயரும். அனைத்து வங்கிகளிலும் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் இந்த வட்டி  உயர்வு சொசைட்டி உறுப்பினர்களுக்கு கூடுதல் சுமையைத் தரும்.

               உறுப்பினர்களையும் RGBக்களையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக நிர்வாகக்குழுவால் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வை திரும்ப பெறக்கோரி அனைத்து சொசைட்டி உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெற்று சொசைட்டி தலைவருக்கு அனுப்பிட மாநிலச் சங்கம் வேண்டுகிறது. 

               சொசைட்டியை பாதுகாக்க உடனே கையெழுத்து இயக்கம் நடத்துவோம். 

    கூடுதல் விபரம் பெற :- 201506181434606184189.
  • தோழர்.A.M. பாட்டீல் மறைவுக்கு வருந்துகிறோம்.

    BSNLEU குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணம்.

               ஹிமாசல் பிரதேசம் டல்ஹௌசியில் 16-06-2015 முதல் நடைபெறும் BSNLEU மத்தியச் செயற்குழுவில் கலந்து கொண்ட குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

              அன்னாரின் மரணச்செய்தி கேட்டு வருந்துகிறோம். அவர்தம் குடும்பத்தினருக்கும், குஜராத் மாநிலச் சங்கத் தோழர்களுக்கும் BSNLEU தூத்துக்குடி மாவட்டச் சங்கம் இதயபூர்வ இரங்கலை தெரிவிக்கிறது.

  • கருத்துப்படங்கள்

    பத்திரிக்கைகளில் வந்த கருத்துப்படங்களில் சில

    IMG_30380195878719FB_IMG_1433182069706FB_IMG_1433436070306FB_IMG_1433350458425FB_IMG_1433181934980