• “பாரத ரத்னா” அப்துல் கலாம் மறைவு

  முன்னாள் குடியரசு தலைவர் ” பாரத ரத்னா” டாக்டர் அப்துல் கலாம் காலமானார்.

  images

              இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நேற்று மேகாலயா மாநிலத்தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற விழாவில் உரை நிகழ்த்தும் பொழுது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் வைத்து மரணமடைந்தார்.

           அன்னாரின் மறைவிற்கு BSNLEU தூத்துக்குடி மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

 • LEO அலுவலகம் நோக்கி கோரிக்கைப் பேரணி 29-07-2015

  BSNL ஊழியர் சங்கம் மற்றும் 

  தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்,  

  தூத்துக்குடி மாவட்டம்.

  தோழர்களே ! தோழியர்களே !!

  குறைந்தபட்ச சம்பளமாக ரூபாய் 15,000/- கேட்டு தூத்துக்குடி LEOவிடம் கோரிக்கை மனு அளிக்கும்

  கோரிக்கைப் பேரணி

  நாள் : 29-07-2015 புதன்கிழமை காலை 10மணி

  இடம் : தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பிருந்து

  தலைமை :

  தோழர். S.  மணிகண்டராஜ், மாவட்டச் செயலர்,TNTCWU, TT.

  தோழர். A.செல்வம், மாவட்டச் செயலர், TNTCWU, NGC.

  தோழர். S. முருகன், மாவட்டச் செயலர், TNTCWU, TVL.

  முன்னிலை :

  தோழர். M.  ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU, TT.

  தோழர். K.  ஜார்ஜ், மாவட்டச் செயலர், BSNLEU, NGC.

  தோழர். N.  சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலர், BSNLEU, TVL.

  பேரணியை துவக்கி வைப்பவர் :

  தோழர். E. ராதாகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், TNTCWU.

  வாழ்த்துரை :

  தோழர். V.P.  இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU.

  தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

  தோழர். C. சுவாமி குருநாதன், மாநில உதவித் தலைவர், BSNLEU.

  தோழர். P.  ராமர், மாவட்டச் செயலர், AIBDPA, TT.

  நிறைவுரை :

  தோழர். R.  ரசல், மாநிலச் செயலர், CITU.

  நன்றியுரை :

  தோழர். A.  ஜேசுதாசன், மாவட்டப் பொருளாளர், TNTCWU, TT.

  பற்றாக்குறை வாழ்க்கையை விரட்டிட !

  கணிசமான சம்பள உயர்வைப் பெற்றிட !!

  பெருந்திரளாகப் பங்கெடுப்போம் !!!

  கோரிக்கையை வென்றெடுப்போம் !!!!

  தோழமையுடன்,

  M.ஜெயமுருகன்,       S. மணிகண்டராஜ்,  

  மாவட்டச் செயலர்கள், BSNLEU &TNTCWU, TT.

   

 • மாபெரும் பேரணி LEO அலுவலகம் நோக்கி TNTCWU அறைகூவல்

   

  BSNL ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், 

  தமிழ் மாநில சங்கங்கள்.

  மாநிலத்தில் 7 மையங்களில் பேரணி

  ஜூலை-29, 2015 (புதன்கிழமை)

  ரூபாய் 15,000 குறைந்தபட்ச சம்பளம் 

  இதுவே நமது கோரிக்கை

  15,000 குறைந்தபட்ச சம்பளம்.

  அருமைத் தோழர்களே ! தோழியர்களே !!!

             ஒப்பந்த முறை அமுல்படுத்தப்பட்ட துேக்க காைத்தில் LOWEST QUOTATION, LOWEST RATE, LOWEST TENDER என்பபத BSNL நிர்வாகத்தின் அணுகு முறையாக இருந்தது. அதன் ேிலளோக ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் மிகவும் சொற்பமாகவும, அற்பமாகவும் இருந்தது. இந்த சுரண்டல் தகாடுலமலய எதிர்த்து TNTCWU சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரு சங்கங்களும் இணைந்து ஒப்பந்த ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்காக தீவிரபோராட்டத்தில் களமிறங்கினோம். மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த ததாலகலய சம்பளமாக வழங்கிட வேண்டும் என்று போராடினோம். போராட்டத்திற்குப் பின்னர் மாநில நிர்வாகம் உத்தரவிட்டது. இது முதல் முன்பைற்ைம். அடுத்த கட்டமாக மேலும் கூடுதல் சம்பளம் வழங்கிட கேட்டு, மத்திய தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு மகஜர் அளித்தோம். அதிகாரிகளிடம் முறையிட்டோம். மாநில முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். பை முல தமிழ் மாநில து பமைாளர் அலுேைகத்தில் சங்கமித்து ஆபேசத்லத தேளிப்படுத்திபைாம்.அதன் ேிலளோக,

  ஒப்பந்த ஊழியருக்கு தினசரி சம்பளம் ரூபாய் 120/150/180 + VARIABLE DEARNESS ALLOWANCE என்று மாற்றியமைத்து மத்திய அரசின் CHIEF LABOUR COMMISSIONER 20-05-2009 அன்று உத்தரவிட்டார். அதை BSNLEU மத்திய சங்கம் மற்றும் BSNLCCWF ஆகிய சங்கங்களின் கடுமையான முயற்சிகளின் காரணமாக BSNL தலமையகம் 06-05-2010 அன்று மறு உத்தரவு வெளியிட்டது. இந்த உத்தரவின் பலனாக மாநிலமுழுவதும் ஒரே சீரான சம்பளம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பஞ்சப்படி உயர்வு என்பதை உறுதிப்படுத்தினோம். இந்த உத்தரவு தேதியிடப்பட்டு ஐந்து வருடங்கள் முடிந்து ேிட்டை. ஊதியம் மறுபடியும் மாற்றியமைக்கப்பட வேண்டும், உயர்த்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான துவக்க நடவடிக்கைகைள கூட மத்திய அரசாங்கம் ஆரம்பிக்கவே இல்லை. இந்த சூழ்நிலையில்தான் நாடு முழுவதும் CITU உள்ளிட்ட அனைத்து மத்திய

  தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000/- என முன் முன்மொழிந்துள்ளன. நாமும் BSNL நிறுவனத்தில் பணியாற்றும் UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000/- நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற

  கோரிக்கையை முன்வைக்கின்போம். தகுதி அடிப்படையில் SEMI-SKILLED, SKILLED, HIGHLY SKILLED ஊழியர்களுக்கு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

  இந்த கோரிக்கைகளை முன்நிறுத்தி முதற்கட்ட இயக்கமாக 2015 ஜூலை மாதம் 29 ஆம் தேதி பெருந்திரளாக ஒப்பந்த ஊழியர்களையும், நிரந்தர ஊழியர்களையும் திரட்டி  ஒன்றிணைந்து தமிழகத்தில் உள்ள கீழ்கண்ட மத்திய தொழிலாளர் துறை அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்தி கோரிக்கை மனுவை அளித்திடுவோம்.

  வ.எண்         மத்திய தொழிலாளர்அலுவலகம் பங்கேற்கும் மாவட்டங்கள்

  1 சென்லை                                      சென்னை, வேலூர்

  2 பாண்டிச்சேரி                            பாண்டிச்சேரி, கடலூர்,

  3 மதுரை                                          மதுரை, விருதுநகர், காரைக்குடி

  4 தூத்துக்குடி                                  தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில்

  5 திருச்சி                                             திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம்

  6 கோவை                                            கோவை, நீலகிரி, ஈரோடு

  7 சேலம்                                                     சேலம், தர்மபுரி

  மாட மாளிகையும், கூடகோபுரமும் கேட்கவில்லை..

  குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 15,000/- தான் கேட்கின்றோம்..

  வருடத்திற்கு 30,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும்

  BSNL நிறுவனத்தில் முதுகெலும்பாக உழைக்கின்ற..

  தொழிலாளியின் உரிமையை கேட்கின்றோம்..

  பெரும் திரளாக பங்கேற்போம்…கோரிக்கையை வென்றெடுப்போம்…

  தோழமையுடன்

  A.பாபு ராதாகிருஷ்ணன்                                                       C.வினோத்குமார்

  மாநிலச் செயலர்                                                                 மாநிலச் செயலர்

  BSNLEU                                                                                                    TNTCWU

 • BSNL CCWF அகில இந்திய மாநாடு – கன்னியாகுமரியில்

  BSNL CCWF அகில இந்திய மாநாடு – வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் 26-07-2015

  BSNL ஊழியர் சங்கம் மற்றும்

  தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்

  நாகர்கோவில் மாவட்டம்

  14-07-2015

  BSNL CCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு

  அமைப்புக்கூட்டம்

  நாள்: 26-07-2015 ஞாயிற்றுக் கிழமை

  நேரம்: காலை 10 மணி

  இடம்: தமிழ் நாடு அரசுஊழியர் சங்க அலுவலகம்,

  டென்னிசன் சாலை, வசந்தம் மருத்துவமனை எதிரில்,  நாகர்கோவில்.

  பங்கேற்போர்:

  தோழர்கள்:

  A.V. பெல்லார்மின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

  S. செல்லப்பா, மாநிலத்தலைவர் & அகில இந்திய உதவிப் பொதுச் செயலர், BSNLEU.

  A. பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU.

  P. இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU

  M. முருகையா, மாநிலத்தலைவர் & அகில இந்திய உதவித் தலைவர், BSNLCCWF.

  C. வினோத்குமார், மாநிலச் செயலர், TNTCWU.

  C. பழனிச்சாமி, மாநில உதவிச் செயலர், TNTCWU.

  K. விஸ்வநாதன், மாநில பொருளாளர், TNTCWU.

  C. குமார், அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்,  BSNLCCWF.

  K. தங்கமோகன், மாவட்டச் செயலர், CITU.

  மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள்.

  திரளாக பங்கேற்போம்..

  அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவோம்..

  தோழமையுடன்

  A.செல்வம்                                          K.ஜார்ஜ்

  மாவட்டச் செயலர்                          மாவட்டச் செயலர்

  TNTCWU                                                     BSNLEU

 • புனித ரம்ஜான் வாழ்த்து

  அனைவருக்கும் இனிய புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்.

   

  eid_mubarak_461

  ramzan

 • எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க மோடி வேண்டுகோள்

   எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு மக்களைக் கேட்கும் , பிரதமர் ஊழலில் திழைக்கும் தமது கட்சித் தலைவர்களை ஊழலை விட்டுவிடக் கூறாதது ஏன் ?

            எரிவாயு மானியத்தை, விட்டுக்கொடுக்குமாறு நம்மிடம் கூறும் பிரதமர், எவ்வளவு வசதியாக, நம்மிடம் சில விஷயங்களை மறைக்கிறார் என்பதை அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

  2014-2015-ல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளித்துள்ள வரிச்சலுகை ரூபாய் 5.89 இலட்சம் கோடி.

  2013-2014-ல், பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுத்த வரிச்சலுகை ரூபாய் 5.73 இலட்சம் கோடி.

  இப்படி, கடந்த 10 ஆண்டுகளில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்த பரிசு ஏறத்தாழ 30 இலட்சம் கோடி ரூபாய்.

         காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்று சொல்லி, தங்களை வித்தியாசமான கட்சி என்று கூறி, ஆட்சிக்கு வந்த இவர்கள், காங்கிரஸ் கட்சியை, அசுர வேகத்தில் முந்திச் சென்று கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்து வருகிறார்கள்.

  வரிச்சலுகை என்ற பெயரில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, போன வருடம் மட்டும், 5.89 இலட்சம் கோடி ரூபாய், தள்ளுபடி செய்பவர்கள்,

  நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண ஏழைகளுக்கு, மானியமாக அளிப்பது, எவ்வளவு தெரியுமா?

  வெறும், 2. 27 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

  நம்மிடம், எரிவாயு மானியத்தை கைவிடச்சொல்லும் பிரதமருக்கு அம்பானி /அதானிகளிடம், வரிச்சலுகையும், மானியங்களும், தர முடியாது என்று சொல்ல, அரசியல் திடம், இருக்கிறதா?

         ஓராண்டின் முடிவில் ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக தம்பட்டம் அடிக்கின்ற நேரத்தில் BJP ஆழும் மாநிலங்களில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏழை, எளியவர்களைப் பார்த்து மானியத்தை விட்டுக் கொடுக்கச் சொல்லும் மோடி தனது கட்சி முதல்வர்களையும் அமைச்சர்களையும் செய்யும் ஊழல்களை விட்டுவிட கூறாதது ஏன் ?

  இந்த கேள்விகளை, நமது பிரதமரைப் பார்த்து கேளுங்கள்.

  பதில், சொல்வாரா பார்ப்போம்.

 • கிரீஸ் அரசுக்கு ஆதரவான கிரீஸ் மக்களைப் பாராட்டுவோம்.

  நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் – பொது வாக்கெடுப்பில் 61.3 சத மக்கள் கிரீஸ் அரசுக்கு ஆதரவு.

  FB_IMG_1436380634593

           சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான சுமைகளை திணிப்பதை எதிர்த்து வாக்களித்த கிரீஸ் மக்கள்.

               IMF, ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் மூலம் நவீன தாராளமய சக்திகள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கள் மீது திணிக்க முயன்ற “சிக்கன நடவடிக்கைகள்” என்ற பெயரிலான பொருளாதார தாக்குதலை உறுதியான முறையில் ஏற்க மறுத்த கிரீஸ் மக்கள். 

               கிரீஸ் மக்களின் குரலையும் அவர்களின் ஜனநாயக தீர்ப்பையும் பாராட்டுவோம் ! வாழ்த்துவோம் !!

 • பஞ்சப்படி உயர்வு 01-07-2015 முதல் 2.1சதம்

  100.5 சதமாக இருந்த பஞ்சப்படி 01-07-2015 முதல்  (IDA) 2.1 சதம் உயர்ந்து மொத்தம் 102.6 சதமாகியுள்ளது .