• BSNLஐக் காக்க தேசம் தழுவிய வேலைநிறுத்தம்

    2015 செப்டம்பர் 2ல் 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல்.

    FB_IMG_1440737867350

              BSNL நிறுவனத்திலுள்ள 11 ஊழியர் சங்கங்கள் கீழ்க்கண்ட 10அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி 02-09-2015ல் அகில இந்திய வேலைநிறுத்தம் நடத்த முடிவெடுத்து BSNL நிர்வாகத்திற்கு வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ளன.

    கோரிக்கைகள் :-

    மத்திய அரசே ! BSNL நிர்வாகமே !!

    1. BSNLலில் தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனேயைக் கைவிடு !

    2. செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணைக்கம்பேனி அமைக்கும் முடிவைக் கைவிடு !

    3. BSNL வளர்ச்சிக்காக கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய் !

    4. BSNL லுடன் BBNL நிறுவனத்தை இணை. MTNL நிறுவனத்தை இணைக்காதே !

    5. ஊழியர் விரோத “டிலாய்ட் குழு” பரிந்துரைகளை அமுல்படுத்தாதே !

    6. BSNLலில் விருப்ப ஓய்வை அனுமதிக்காதே !

    7. BWA ஸ்பெட்க்ரம் அலைக்கற்றைக் கட்டணம் ரூபாய் 6700 கோடியை திருப்பி வழங்கு !

    8. BSNL கைவசம் உள்ள அனைத்து சொத்துக்களையும் BSNL பெயருக்கு மாற்றம் செய் !

    9. உற்பத்தியின் அளவீட்டை கணக்கிட்டு குறைந்தபட்ச போனஸ் வழங்கு !

    10. BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30சதவீத ஓய்வூதியப் பலன்களை வழங்கு !

    மத்திய சங்கங்களின் அறைகூவலை வெற்றிகரமாக்கிட அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !!!

    இவண்

    BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு , தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்.

     

  • LEO அலுவலகம் நோக்கி பிரமாண்டப் பேரணி 25-05-2015

    BSNL ஊழியர் சங்கம்ற்றும் 

    தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்,  

    தூத்துக்குடி மாவட்டம்.

                     குறைந்தபட்ச சம்பளமாக ரூபாய் 15,000/- கேட்டு தூத்துக்குடி LEOவிடம் கோரிக்கை மனு அளிக்கும் கோரிக்கைப் பேரணி  25-08-2015 இன்று செவ்வாய்க்கிழமை காலை 1100 மணிக்கு தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பிருந்து (காமராஜ் கல்லூரி முன்பு) புறப்பட்டது. தோழர். E. ராதாகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், TNTCWU. பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    1440486481480JpegJpegJpegJpeg1440486481480

                  பேரணியின் நிறைவில் தூத்துக்குடி LEO விடம் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூபாய் 15,000/-கேட்டு கோரிக்கைப் மனு அளிக்கப்பட்டது.

              பேரணியின் நிறைவில்  நடைபெற்ற கோரிக்கை விளக்கக்கூட்டத்தை தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU தலைமை தாங்கினார்.

        கோரிக்கை விளக்கக் கூட்டத்தை துவக்கிவைத்து BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர். V.P.  இந்திரா எழுச்சிமிக்க துவக்க உரை ஆற்றினார்.

             தோழர். S.  மணிகண்டராஜ், மாவட்டச் செயலர்,TNTCWU, TT, தோழர். A.செல்வம், மாவட்டச் செயலர், TNTCWU, NGCதோழர். S. முருகன், மாவட்டச் செயலர், TNTCWU, TVLதோழர். M.  ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU, TT, தோழர். K.  ஜார்ஜ், மாவட்டச் செயலர், BSNLEU, NGC, தோழர். N.  சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலர், BSNLEU, TVL, தோழர். C. சுவாமி குருநாதன், மாநில உதவித் தலைவர், BSNLEU. TVL, தோழர். P.  ராமர், மாவட்டச் செயலர், AIBDPA, TT ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தியும், விளக்கியும் பேசினர்.

    JpegJpegJpegJpegJpegJpegJpegJpeg

                  கோரிக்கை விளக்கக்கூட்டத்தை நிறைவுசெய்து CITU மாநிலச் செயலர் தோழர். R.  ரசல் சிறப்புரை ஆற்றினார்.

                    நன்றியுரையை தோழர். A.  ஜேசுதாசன், மாவட்டப் பொருளாளர், TNTCWU, TT ஆற்றிட கோரிக்கை விளக்கக்கூட்டம் நிறைவுற்றது.

       

  • கோவில்பட்டியில் சிறப்பாக நடைபெற்ற BSNLEU & TNTCWU கிளைச் சங்கங்களின் இணைந்த கிளை மாநாடு.

    BSNL ஊழியர் சங்கத்தின் 13வது கிளை மாநாடு மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 6வது கிளை மாநாடும் இணைந்த மாநாடாக இன்று 22-08-2015 சிறப்பாக நடைபெற்றது.

                22-08-2015 காலை 1040 மணி அளவில் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக கோவில்பட்டி தொலைபேசி நிலையம் முன்பு கொடிஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. தேசியக் கொடியை தோழர். C. செல்லத்துரை, BSNLEU கொடியை தோழர்.  K. சரவணனும், TNTCWU சங்கக் கொடியை தோழர். M. மதியழகனும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர். அஞ்சலி உரையினை கிளை உதவித் தலைவர் தோழர். C. மீனாட்சிசுந்தரம் நிகழ்த்தினார்.

            BSNLEU KVT கிளைத் தலைவர் தோழர். P. முத்துராமலிங்கம், மற்றும் கிளை உதவித் தலைவர் தோழர். இணைந்து தலைமை உரையாற்றினர். வந்திருந்த அனைவரையும் BSNLEU கிளைச் செயலர் தோழர். M. பாலசுப்பிரமணியன் மற்றும் TNTCWU கிளைச் செயலர் தோழர். N. பாலாசிங் வரவேற்றனர். BSNLEU தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன் மற்றும் TNTCWU தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். S. மணிகண்டன் துவக்க உரை ஆற்றினர் .

    JpegJpegJpeg

               AIBDPA அ.இ. உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் நடைபெற்ற “BSNLலின் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு”  என்ற சேவைக் கருத்தரங்கத்தில் நிர்வாகத்தின் சார்பில் KVT கோட்டப் பொறியாளர் திரு. S. வேல்வாசகமும் BSNL ஊழியர் சங்கம் சார்பில் BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர். V.P. இந்திராவும் வளர்ச்சி சம்பந்தமாக புள்ளி விபரங்களை எடுத்துரைத்தனர்.

    JpegJpegJpegJpegJpegJpegJpegJpeg

      .

     .

    , .

    வாழ்த்துரை சகோதரச் சங்க தோழர்கள் மற்றும் அதிகாரிகள்.


    பொருளாய்வுக்குழு.

    அமைப்புநிலை விவாதம்,

    புதிய நிர்வாகிகள் தேர்வு,

    தீர்மானங்கள்.

    நன்றியுரை : 

    தோழர். S. ஆறுமுகம், மாவட்ட அமைப்புச் செயலர், BSNLEU.

     

  • கோரிக்கைப்பேரணி – 25-08-20115 – தூத்துக்குடி LEO அலுவலகம் நோக்கி

    BSNL ஊழியர் சங்கம் மற்றும் 

    தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்,  

    தூத்துக்குடி மாவட்டம்.

    தோழர்களே ! தோழியர்களே !!

    குறைந்தபட்ச சம்பளமாக ரூபாய் 15,000/- கேட்டு தூத்துக்குடி LEOவிடம் கோரிக்கை மனு அளிக்கும்

    கோரிக்கைப் பேரணி

    நாள் : 25-08-2015 செவ்வாய்க்கிழமை காலை 10மணி

    இடம் : தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பிருந்து (காமராஜ் கல்லூரி முன்பு)

    தலைமை :

    தோழர். S.  மணிகண்டராஜ், மாவட்டச் செயலர்,TNTCWU, TT.

    தோழர். A.செல்வம், மாவட்டச் செயலர், TNTCWU, NGC.

    தோழர். S. முருகன், மாவட்டச் செயலர், TNTCWU, TVL.

    முன்னிலை :

    தோழர். M.  ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU, TT.

    தோழர். K.  ஜார்ஜ், மாவட்டச் செயலர், BSNLEU, NGC.

    தோழர். N.  சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலர், BSNLEU, TVL.

    பேரணியை துவக்கி வைப்பவர் :

    தோழர். E. ராதாகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், TNTCWU.

    வாழ்த்துரை :

    தோழர். V.P.  இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU.

    தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

    தோழர். C. சுவாமி குருநாதன், மாநில உதவித் தலைவர், BSNLEU.

    தோழர். P.  ராமர், மாவட்டச் செயலர், AIBDPA, TT.

    நிறைவுரை :

    தோழர். R.  ரசல், மாநிலச் செயலர், CITU.

    நன்றியுரை :

    தோழர். A.  ஜேசுதாசன், மாவட்டப் பொருளாளர், TNTCWU, TT.

    பற்றாக்குறை வாழ்க்கையை விரட்டிட !

    கணிசமான சம்பள உயர்வைப் பெற்றிட !!

    பெருந்திரளாகப் பங்கெடுப்போம் !!!

    கோரிக்கையை வென்றெடுப்போம் !!!!

    தோழமையுடன்,

    M.ஜெயமுருகன்,       S. மணிகண்டராஜ்,  

    மாவட்டச் செயலர்கள், BSNLEU &TNTCWU, TT.

     

  • கோவில்பட்டி BSNLEU & TNTCWU கிளைச் சங்கங்களின் இணைந்த கிளை மாநாடு.

    22-08-2015 கோவில்பட்டி கிளைச்சங்கங்களின் இணைந்த கிளை மாநாடு மற்றும் சேவைக்கருத்தரங்கம்.

    இடம் : கோவில்பட்டி தொலைபேசி நிலையம்.

    காலம் : 22-08-2015 சனிக்கிழமை காலை 0900 மணி முதல்

    தலைமை :

    தோழர். P. முத்துராமலிங்கம், கிளைத் தலைவர், BSNLEU, KVT.

    தோழர். K. பாலகிருஷ்ணன், கிளைத் தலைவர், TNTCWU, KVT.

    வரவேற்புரை :

    தோழர். M. பாலசுப்பிரமணியன், கிளைச் செயலர், BSNLEU, KVT.

    தோழர். N. பாலாசிங், கிளைச் செயலர் , TNTCWU, KVT.

    துவக்க உரை :

    தோழர். M. ஜெயமுருகன்,  மாவட்டச் செயலர், BSNLEU.

    சிறப்புரை :

    தோழர். S. மோகன்தாஸ், அ.இ. உதவித் தலைவர், AIBDPA.

    தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

    சேவைக் கருத்தரங்கம்

    BSNLலின் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு

    தோழர். V.P. இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU.

    திரு. S. வேல்வாசகம், கோட்டப் பொறியாளர், KVT.

    வாழ்த்துரை சகோதரச் சங்க தோழர்கள் மற்றும் அதிகாரிகள்.


    பொருளாய்வுக்குழு.

    அமைப்புநிலை விவாதம்,

    புதிய நிர்வாகிகள் தேர்வு,

    தீர்மானங்கள்.

    நன்றியுரை : 

    தோழர். S. ஆறுமுகம், மாவட்ட அமைப்புச் செயலர், BSNLEU.

     

  • FORUMத்தின் சார்பில் மாபெரும் கண்டன முழக்கம் தூத்துக்குடியில்

    துணை டவர் கம்பேனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன முழக்கம் 12-08-2015.

              12-08-2015 மதியம் 0100மணி அளவில் FORUM சார்பில் நடைபெற்ற கண்டன முழக்கத்தை தலைவர் தோழர். I. லிங்கபாஸ்கர் துவக்கி வைத்தார். 29 பெண்கள் உட்பட 123 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் போராட்டத்தை விளக்கி பேசினர். FORUMத்தின் பொருளாளர் தோழர். S. பால்ராஜ் பட்டுக்குமார் நன்றிகூறி முடித்து வைத்தார்.

     

  • மாபெரும் கண்டன முழக்கம் மற்றும் அஞ்சல் அட்டை இயக்கம்

    FORUMத்தின் முடிவை அமலாக்கக் கோரி தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்.

    FORUM சார்பில் இரண்டு கட்ட இயக்கம் நடத்த அறைக்கூவல் விடப்பட்டுள்ளது.

    1) 12-08-2015 கண்டன முழக்கம் :-

                   நாடு முழுவதுமுள்ள டவர்களை பிரித்து தனியாக டவர் கம்பேனி அமைக்க ஒப்புதல் வழங்கிய கேபினட் அமைச்சரவையைக் கண்டித்து நாடு தழுவிய கண்டன முழக்கம் 12-08-2015ல் நடத்துவது. 

    2) அஞ்சல் அட்டை இயக்கம் 2015 ஆகஸ்ட் 10 முதல் 22 வரை :- 

                FORUMத்தின் முடிவுகளை அமலாக்கக் கோரி நாடு தழுவிய அளவில் ஒவ்வொரு ஊழியரும் தனது பெயர், பதவி, விலாசத்துடன் தொலைத்தொடர்பு அமைச்சருக்கு அஞ்சல் அட்டை எழுதுவது என்றும் அதனை மொத்தமாக வாங்குவது என்றும் ஒரே இயக்கமாக அனைவரிடமும் கையெழுத்து பெற்று மொத்தமாக அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த இயக்கங்களை சிறப்புடன் நடத்திட சபதமேற்போம்.

    [Read More…]