• (IDA) பஞ்சப்படி உயர்வு 01-10-2015 முதல் 5.3சதம்

     

       01-10-2015 முதல் பஞ்சப்படி (IDA) 5.3சதம் உயர்ந்து மொத்தம் 107.9 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

     

  • இடைக்கால போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

    இடைக்கால போனஸ் வழங்கிடக் கோரி 06-10-2015ல் FORUM சார்பில் ஆர்ப்பாட்டம்.

                   உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது BSNLலில் வழங்கப்பட்டது. BSNL நிறுவனம் நஷ்டத்தைக் காரணம் கூறி போனஸ்  வழங்குவதை மறுத்து வந்தது. உழைப்பிற்குரிய போனஸ் வழங்கிட வேண்டும் என BSNLEUமற்றும் FORUM சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் போராட்டங்கள் நடத்தியும் கடந்த வருடம் வரை போனஸ் வழங்கிட மறுத்துவந்த நிலையில் முன்னேற்பாடாக இந்த வருடம் வருகின்ற 06-10-2015 அன்று இடைக்கால போனஸ் வழங்கிடக் கோரி அனைத்து கிளைகளிலும் FORUM சார்பில் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

               நமது மாவட்டத்தில் வருகின்ற 06-10-2015 அன்று அனைத்து கிளைகளிலும் FORUM சார்பில் நடைபெரும் சக்திமிக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மாவட்டச்செயலர் ஜெயமுருகன்.

     

     

     

     

     

     

     

     

     

  • தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் மறைவு

    தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் மறைவிற்கு அஞ்சலி.

             தென் மாவட்டங்களில் K.G. போஸ் அணியை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவராகவும் E3, E4 மற்றும் ITEU சங்கங்களில் மாவட்ட, மாநில பொறுப்புகளை வகித்தவரும் AIBDPA உறுப்பினருமான தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் அவர்கள் 21-09-2015 அன்று காலமானார்கள்.

            இருதய சிகிச்சைக்காக  சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்கள். அன்னாரது மறைவிற்கு அஞ்சலியையும், அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தூத்துக்குடி மாவட்டச் சங்கம் தெரிவிக்கிறது.

  • FORUMத்தின் சார்பில் மாபெரும் தார்ணா தூத்துக்குடியில்

    துணை டவர் கம்பேனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் தார்ணா 16-09-2015.

           BSNLஐ பலவீனப்படுத்தும் முயற்சியாக BSNL நிறுவனத்திற்கு சொந்தமான 65,000க்கும் மேற்பட்ட செல் தொலைபேசி கோபுரங்களை பிரித்து அவற்றை நிர்வகிக்க ஒரு துணை டவர் நிறுவனம் உருவாக்கும் மத்திய அரசின் மோசடியான திட்டத்தை கைவிடக்கோரி 16-09-2015 காலை 1030மணி அளவில் FORUM சார்பில் நடைபெற்ற தார்ணாவை  FORUMத்தின் தலைவர் தோழர். I. லிங்கபாஸ்கர் துவக்கி வைத்தார்.  

                 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணாவில் கீழ்க்கண்ட தோழர்கள் போராட்டத்தை விளக்கி பேசினர்.

    தோழர். M. ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU.

    தோழர். M. பாலகண்ணன், மாவட்டச் செயலர், NFTE 

    தோழர். மரிய அந்தோணி பிச்சை, SNEA மாவட்டச் செயலர், 

    தோழர். I. சரவணன், AIBSNLEA மாவட்டச் செயலர், 

    தோழர். R.M. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU,

    JpegJpegJpegJpeg

            FORUMத்தின் பொருளாளர் தோழர். S. பால்ராஜ் பட்டுக்குமார் நன்றிகூறி முடித்து வைத்தார்.

  • கேரளாவில் சங்கத்தலைவர்கள் பணியிடைநீக்கம்

    BSNLEU, SNEA & BSNLCCLU டெல்லி தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதம்

            கேரள மாநிலத்தில் BSNLEU, SNEA, BSNLCCLU ஆகிய சங்கங்கள் செய்த நீண்ட போராட்டங்களுக்கு பின்பு ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க மாநில நிர்வாகம் கடந்த 20-08-2015 அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக  இருந்த அன்றைய கேரள மாநில தலைமை பொது மேலாளர் M.S.S. ராவ் விடுப்பில் செல்ல பணிக்கப்பட்டு BSNL நிர்வாக உத்தரவின்படி திரு. N.K. குப்தா, இயக்குனர் (CFA) கேரள மாநில தலைமை பொறுப்பை ஏற்று ஊதிய ஒப்பந்தம் போட்டு இந்த போராட்டத்தை முடித்து வைத்தார்.

              விடுப்பு நிறைவுற்ற நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பிய தலைமை பொது மேலாளர் M.S.S. ராவ் சங்கத் தலைவர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகளை போட்டதுடன் காவல்துறையிலும் பதிவு செய்தார். அதிலும் திருப்தி அடையாத தலைமை பொது மேலாளர் M.S.S. ராவ் 11-09-2015ல் தோழர். K. மோகனன், மாநிலச் செயலாளர், BSNLEU தோழர். S. பிரதாப் குமார், AGS, BSNLEU தோழர். P. கோபக்குமார், CVP, BSNLEU தோழர். C. சந்தோஷ்குமார், ACS, BSNLEU தோழர்.  பிஜூ ராகவன், DS, BSNLEU தோழர். T. சந்தோஷ்குமார், DS, SNEA தோழர். நரேந்திர குமார் மாவட்டத்தலைவர், SNEA உள்ளிட்ட 15 சங்கத் தலைவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

          மேற்படி பணியிடை நீக்கத்தை கண்டித்தும் அமைதியான முறையில் போராடிய தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீக்கக்கோரியும் சர்வாதிகாரமாக செயல்படும் தலைமை பொது மேலாளர் M.S.S. ராவ் அவர்களை  இடமாற்றம் செய்யக் கோரியும் டெல்லி கார்பொரேட் அலுவலகம் முன்பு 17-09-2015 முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்திடவும், கேரள மாநில தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

           போராட்டம் வெற்றிபெற தூத்துக்குடி BSNLEU வாழ்த்துகிறது.

  • நன்றி… நன்றி… நெஞ்சுநிறை நன்றி !

    தேசம் காக்க செப் 2 வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி

              தொழிலாளர், மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் 2015 செப்டம்பர் 02 ல் நடைபெற்றதில் 15கோடிக்கும் மேலான உழைக்கும் வர்க்க தோழர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற வைத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி.