• BSNLCCWF 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

    மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் 15 அம்ச கோரிக்கை மனு அளிப்பு.

     

                      அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி BSNLEU &TNTCWU மாநிலச் சங்க அறைகூவலுக்கிணங்க 15 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர். R.M கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை தாங்கினார். BSNLEU சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர். M. ஜெயமுருகன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மாவட்டச் செயலாளர் தோழர். S. மணிகண்டராஜ் TNTCWU சிறப்புரை நிகழ்த்தினார். 20க்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். TNTCWUயின் தூத்துக்குடி கிளைச் செயலாளர் தோழர். V. தேவதாசன் நன்றி கூறினார். 

  • TNTCWU சிறப்புக்கூட்டம்

    29-11-2015 TNTCWU சிறப்புக்கூட்டம்.

    JpegJpeg

                29-11-2015 இன்று மாலை 0400மணி அளவில் தூத்துக்குடி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். R. M. கிறிஸ்டோபர் தலைமையில் TNTCWU சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. BSNLCCWF அனைத்திந்திய உதவிச் செயலர் தோழர். C.பழனிச்சாமி, TNTCWU மாநிலச் செயலர் தோழர். C.வினோத்குமார் சிறப்புரை ஆற்றினர். TNTCWU மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர். E. ராதாகிருஷ்ணன்,  BSNLEU மாவட்டத்தலைவர் தோழர்.T. சுப்பிரமணியன், AIBDPA மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் வாழ்த்து உரையாற்றினர்.

  • 7-வது ஊதியக் குழுவின் மோசமான பரிந்துரையைக் கண்டித்து போராட்டம்

    மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் – 7- வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து 

    மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய அரசு அமைத்த 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். 5, 6-வது ஊதியக் குழுவில் 40 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால், 7-வது குழு வெறும் 14.2 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஊதிய உயர்வை பரிந்துரைத்துள்ளது.

    தேசிய ஊழியர் கவுன்சில், 7-வது ஊதியக் குழுவிடம் அளித்த மனுவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. ஆனால், இக்குழு ரூ.18 ஆயிரம் மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. மேலும், செயலர் பதவிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.2.25 லட்சம் என உயர்த்தி பரிந்துரைத்துள்ளது. இது இக்குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட 12.5 மடங்கு அதிகமாகும். இதேபோல, கேபினட் செயலர் பதவிகளுக்கு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.2.50 லட்சம் என்பது, இக்குழு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட 14 மடங்கு அதிகமாகும்.

    மேலும், 7-வது ஊதியக் குழு பரிந்துரையில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை, வாகனம் வாங்குவதற்கான முன்பணம், ரிஸ்க் அலவன்ஸ் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேரும், பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்கள் 4 லட்சம் பேரும், 12 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    எனவே, குழுவின் பரிந்துரையைக் கண்டித்து வரும் 27-ம் தேதி நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நன்றி – ஹிந்து.

    போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

  • சங்க அங்கிகாரத் தேர்தல் 2016 ஏப்ரல் 26

    7வது சங்க அங்கிகாரத் தேர்தல் 26-04-2016

                     BSNL நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சங்க அங்கிகாரத் தேர்தல் 7வது முறையாக வருகின்ற 2016 ஏப்ரல் 26ல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  

                       கடந்த 5 முறையும் BSNLலின் பங்கு விற்பனையை தடுத்ததோடு,  ஊழியர்களின் நன்மதிப்பைப் பெற்று முதன்மையான அங்கிகாரச் சங்கமாக நமது BSNLEU வெற்றிவாகை சூடியுள்ளது. ஊழியர்களையும், BSNLஐயும் பாதுகாக்கும் ஒரே சங்கமாக மீண்டும் அங்கிகாரம் பெற்றிட பாடுபடுவோம்.

  • கடலூர் மக்களின் துயர் துடைக்க மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

    கடலூர் மக்களின் துயர் துடைக்க BSNLEU தமிழ்  மாநில சங்கம் வேண்டுகோள்.

     
    அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு :-
    சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை ,உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்  . 40 க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது தமிழ் மாநில சங்கம்  அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு 15/11/2015 க்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . மாவட்ட சங்க நிர்வாகிகள் அதற்கான பணியை செய்திட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
  • சிறப்புடன் நடைபெற்ற TNTCWU மாவட்டக்குழுக் கூட்டம்

    12-11-2015ல் TNTCWU தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுக் கூட்டம்.

               12-11-2015 அன்று மாலை 0530 மணி அளவில் தூத்துக்குடி BSNL ஊழியர்சங்க மாவட்ட அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க (TNTCWU ) தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். R.M. கிறிஸ்டோபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

     தோழர். M. முனியராஜா அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வரவேற்புரையினை தோழர். L. செல்வக்குமரன் நிகழ்த்திட துவக்க உரையினை மாநிலச்சங்க நிர்வாகி தோழர். E. ராதாகிருஷ்ணன் நிகழ்த்தினார்.

    Jpeg

    Jpeg

            அனைத்திந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். C. பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

    மாவட்டக்குழு கூட்ட முடிவாக :-

    2015 டிசம்பர் இறுதிக்குள் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும், மாநாட்டை நடத்திட உறுப்பினர் அனைவரிடத்திலும் ரூபாய் 200/- நன்கொடை வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    பிரதி மாதம் 7ம் தேதி சம்பளம் வழங்குவது, சம்பள நிலுவை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தலமட்ட இயக்கம் நடத்துவது.

    நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி 29-11-2015 அன்று பிரச்சார இயக்கத்தை துவக்குவது என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

  • TNTCWU மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

    12-11-2015ல் TNTCWU தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுக் கூட்டம்.

               12-11-2015 அன்று மாலை 0530 மணி அளவில் தூத்துக்குடி BSNL ஊழியர்சங்க மாவட்ட அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க (TNTCWU ) தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். R.M. கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்திந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். C. பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

  • இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.