• (IDA) பஞ்சப்படி உயர்வு 01-01-2016 முதல் 4.5 சதம்.

    01-01-2016 முதல் பஞ்சப்படி (IDA) 4.5சதம் உயர்ந்து மொத்தம் 112.4 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

     

  • இனிய புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள்

    BSNL நிறுவனம் காக்க

    தேசம் காக்க

    மக்கள் சக்தியை ஒன்றுபடுத்திட

    தொழிலாளர் நலனை பாதுகாத்திட

    புத்தாண்டு 2016 ல் சபதமேற்போம் !!! 

     

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!! 

  • கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

     images

  • 22-12-2015ல் கருப்பு பேட்ஜ் அணிந்து வெற்றிகரமாக நடைபெற்ற FORUMன் கண்டன முழக்கம்.

    22-12-2015ல் கருப்பு பேட்ஜ் அணிந்து FORUM சார்பில் கண்டன முழக்கம்.

  • 22-12-2015ல் கருப்பு பேட்ஜ் அணிந்து FORUM சார்பில் கண்டன முழக்கம்.

    ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கிடகோரி கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம்.

             10-12-2015ல் டெல்லியில் கூடிய அகில இந்திய FORUMத்தின் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகளை அமுல் படுத்திட  முடிவு செய்யப்பட்டுள்ளது.

           ♦     பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட 78.2% பஞ்சப்படி இணைப்பு பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்யும் DOT, BSNL நிர்வாகத்தைக் கண்டித்தும் 78.2% பஞ்சப்படி இணைப்பை உடனே வழங்கிடக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2015 அன்று ” கருப்பு பேட்ஜ் “அணிந்து கண்டன முழக்கமிடவும்

               ♦ BSLNLஐ பலப்படுத்த ” SERVICE WITH SMILE” என்கின்ற 100 நாட்கள் திட்டத்தை அமுலாக்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலத்திலும் FORUM முடிவினை அமுல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

                   FORUM முடிவினை அமுல்படுத்த கிளைச் செயலர்கள் நமது மாவட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டச் சங்கம் வேண்டுகிறது.

  • தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..

    சென்னை தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..

    IMG-20151217-WA0038IMG-20151217-WA0041IMG-20151217-WA0044

              தமிழ்நாடு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கமும் தமிழ்நாடு பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய சென்னை வெள்ள நிவாரண துப்புரவு பணி சென்னை அருகம்பாக்கம் MMDA நகரில் நடந்தது. ஏறத்தாழ 230 தோழர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

  • பலத்த போராட்டங்களுக்கு பின் கேடர் பெயர் மாற்றம் வெற்றி .

     கேடர் பெயர் மாற்றம்- போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி !

    Agreement reached in today’s Designation Committee meeting as follows:-

    Sr ToA cadre:-

    1) NE7 & NE 8= Sr. Office Associate.

    2) NE9 & NE10=Asst. Office Superintendent

    3) NE 11 & NE 12= Office Superintendent.

    Regular Mazdoor : Asst. Telecom Technician

    Telecom Mechanic : Telecom Technician

    Telecom Technical Assistant : Junior Engineer.      

     Hearty congrats.

       -P.Abimanyu GS BSNLEU

  • வெள்ள நிவாரணம் வழங்கி மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.

    சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.

                கடந்த பத்துக்கும் மேற்பட்ட தினங்களாக கனமழை பொழிந்து (நூறு ஆண்டுகளில் காணாத பெருமழை) சென்னை, காஞ்சி, கடலூர் பாண்டி என வட தமிழகத்தையே பெருவெள்ளம் மற்றும் மழையினால் புரட்டி போட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து வழித்தடங்களும் (தரைவழி, வான்வழி, இரயில் போக்குவரத்து) பாதிக்கப்பட்டன. சிறிய குடியிருப்பு முதல் மாடி வீடுகளில் வாழ்ந்தவர்களும் இன்று குடிநீர், பால், காய்கறி, உணவு மற்றும் உடைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை கழிக்கவே பெரும் சிரமத்தில் உள்ளனர்.

                  அவர்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட BSNLEU , TNTCWU மாநிலச் சங்கங்கள் வேண்டுகோள் விட்டுள்ளன. வட தமிழகத்தின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திடுவோம்.