• சிறப்பாக நடைபெற்ற BSNLEU &TNTCWU திருச்செந்தூர் இணைந்த கிளைமாநாடு.

  28-02-2016ல் திருச்செந்தூரில் சிறப்புடன் நடைபெற்ற  BSNL ஊழியர்சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க இணைந்த கிளை மாநாடு.

 • BSNLEU மற்றும் TNTCWU திருச்செந்தூர் கிளைகளின் மாநாடு.

  28-02-2016ல் திருச்செந்தூரில் BSNL ஊழியர்சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க இணைந்த கிளை மாநாடு.

  இடம். : தொலைபேசி நிலைய வளாகம், திருச்செந்தூர்.

  காலம் : 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 0930மணி.

  கூட்டு தலைமை :

  தோழர். P. மோகன், கிளைத் தலைவர், BSNLEU தோழர்.அசோக்ராமன், கிளைத்தலைவர், TNTCWU

  வரவேற்புரை :

  தோழர். M. சந்திரசேகரன், கிளைச்செயலர், BSNLEU தோழர். G. ஜேம்ஸ் தனபால், கிளைச் செயலர், TNTCWU

  துவக்க உரை :

  தோழர். M. ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU.

  தோழர். E. ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலர், TNTCWU

  சிறப்புரை :

  தோழர். பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU.

  தோழர். இரா. மெ. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

  சகோதரச்சங்க செயலர்களின் வாழ்த்துரை.

  தோழர் கனகதுரை துரைசிங் பணி நிறைவு பாராட்டு விழா.

   

   

 • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தொடர் வேலைநிறுத்தம்

  09-02-2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் !

  மதிப்பூதியம் / தொகுப்பூதியங்களை ரத்து செய் !!

  அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கு !!!

  உள்ளிட்ட 20அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர். 

  தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • 2016 பிப்ரவரி 2 & 3 ல் திருப்பதியில் AIBDPA அகில இந்திய மாநாடு.

  உற்சாகமாக நடைபெற்ற ஓய்வூதியர் சங்க அனைத்திந்திய மாநாடு – திருப்பதியில் 

             2000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட AIBDPA அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி நகரில் (S.K. வியாஸ் நகர்) ஸ்ரீ ராம துளசி கல்யாண மண்டபத்தில் 02-02-2016 & 03-02-2016 ஆகிய தினங்களில் சிறப்பாக நடைபெற்றது.

           மாநிலங்களவை உறுப்பினர் தோழர். T.K. ரங்கராஜன் துவக்க உரை ஆற்றினார். BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ, சங்க ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, BSNLCCWF சம்மேளனச் செயலர் தோழர். அனிமேஷ் மித்ரா, AIPRPA பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரன், AIBDPA பொதுச் செயலர் தோழர். K.G.ஜெயராஜ், AIBDPA பேட்ரன் தோழர். P.V. சந்திரசேகரன், மற்றும் BSNLEU ஆந்திர மாநிலச் செயலர் மற்றும் AGS தோழர். J. சம்பத்ராவ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

              மாநாட்டின் நிறைவாக தலைவராக தோழர். அனந்த பட்டாசார்ஜி,  பொதுச் செயலராக தோழர். K.G. ஜெயராஜ், பொருளாளராக அரவிந்தாட்சன் நாயர் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த தோழர். S. மோகன்தாஸ் அகில இந்திய உதவித் தலைவராகவும், தோழர். K. காளி பிரசாத் அமைப்புச் செயலராகவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

  ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய அகில இந்திய நிர்வாகிகளை தூத்துக்குடி மாவட்டச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.