• விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் மற்றும் சேவைக் கருத்தரங்கம்

  உற்சாகமான நடைபெற்ற தூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு 

                 31.03.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற உற்சாகமான விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர். T.சுப்ரமணியன் தலைமையில் துவங்கியது. தோழர். M. சந்திரசேகரன், கிளைச்செயலர். TCH, அஞ்சலி உரை நிகழ்த்துனார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். P. பால்ராஜ் பட்டுக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். நெல்லை மாவட்டச் செயலர் தோழர். மரிய சூசை அந்தோணி வாழ்த்துரை வழங்கினார்.

  Jpeg

  Jpeg

                    BSNLEU AGS தோழர் S.செல்லப்பா துவக்க உரை நிகழ்த்தினார்.தூத்துக்குடி மாவட்ட விரிவடைந்த செயற்குழுவைத் தொடர்ந்து நடைபெற்ற “புன்னகையுடன் சேவை” என்ற சேவைக்கருத்தரங்கத்தில் BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன், நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட பொதுச் மேலாளர் உயர்திரு. K. சஜூ ஜார்ஜ் ITS, TT சேவையை விரிவுபடுத்துவது சம்பந்தமாக விரிவாக பேசினர்.

  Jpeg

  Jpeg

                       தொடர்ந்து நடைபெற்ற “புன்னகையுடன் சேவை” என்ற சேவைக்கருத்தரங்கத்தில் BSNLEU மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன்  சேவை சம்பந்தமாக விரிவாக பேசினார். மேலும் செயற்குழுவை மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் தோழர். V.P. இந்திரா, BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர் R.M. கிறிஸ்டோபர், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

                   விரிவடைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கிளைகளின் சார்பில் தோழர்கள். ஹரிராச்சந்திரன், முத்துராமலிங்கம், சந்திரசேகரன், ஹரி கிருஷ்ணன், நேதாஜி மற்றும் மாவட்டப் பொருளாளர் தோழர். C. பன்னீர் செல்வம், மாவட்ட உதவிச் செயலர் தோழர். P. பால்ராஜ் பட்டுக்குமார் பேசினர்.

                    மாநிலச் சங்க தேர்தல் நிதியாக ரூபாய் 18500/-ஐ தூத்துக்குடி மாவட்டச் சங்கம் மாநிலச் செயலரிடம் வழங்கியது.

                 நிறை உரையாக BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன், BSNLEU மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் பேசினர்.

 • சிறப்பாக நடைபெற்ற TNTCWU மாவட்டச் செயற்குழு

  29-03-2016 ல் உற்சாகமாக நடைபெற்ற TNTCWU தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம்.

                தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு கூட்டம் 29-03-2016 அன்று தூடியில் BSNLEU மாவட்டச்சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இச்செயற்குழுவிற்கு மாவட்டத் தலைவர் தோழர். C. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். தோழர் M.முனியராஜா அஞ்சலி உரை ஆற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர். E. ராதாகிருஷ்ணன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு ஆய்படு பொருளை முன்மொழிந்தும் பேசினார்.

           மாவட்ட செயற்குழுவை வாழ்த்தி BSNLEU மாவட்டச்செயலாளர் தோழர் M. ஜெயமுருகன் மற்றும் BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர். ரா.மெ. கிறிஸ்டோபர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் TNTCWU மாநில உதவி பொதுச்செயலாளர் தோழர் C.பழனிச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார்.

           மாவட்டப் பொருளாளர் தோழர். A. சேசுதாசன் நன்றி கூறினார். செயற்குழுவில் கிளைச்செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     19-04-2016ல் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை சக்திமிக்கதாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

 • விரிவடைந்த செயற்குழு மற்றும் சேவைக் கருத்தரங்கம்.

  மாவட்ட விரிவடைந்த செயற்குழு மற்றும்  சேவைக் கருத்தரங்கம்

  இடம் : தூத்துக்குடி EB கவிதா திருமண மண்டபம். (சிவன் கோவில் அருகில்)

   காலம் : 31-03-2016 வியாழக் கிழமை காலை 0930 மணி அளவில்

  தலைமை :

   தோழர். T. சுப்பிரமணியன், மாவட்டத்தலைவர், BSNLEU.

  சிறப்புரை :

  தோழர். S. செல்லப்பா, மாநிலத்தலைவர் மற்றும் துணைப்பொதுச் செயலர், BSNLEU.

  நண்பகல் 1200மணி அளவில் ” புன்னகையுடன் கூடிய சேவை” என்ற தலைப்பில் சேவைக் கருத்தரங்கம்.

  பங்கேற்போர் :

  உயர்திரு. K. சஜூ ஜார்ஜ், ITS, அவர்கள், பொது மேலாளர், BSNL, TT.

  தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர், BSNLEU.

  தோழர். M. ஜெயமுருகன், மாவட்டச்செயலர்,BSNLEU.

  வாழ்த்துரை :

  தோழர். V.P.  இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU.

  தோழர். R.M. கிறிஸ்டோபர், மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

 • BSNLEU அமைப்பு தினம்.

  BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்

               அனைவருக்கும் BSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

 • வருந்துகிறோம்.

  தோழர்.V.முருகாண்டி, TM, KYP மறைவு

  நம்மோடு காயல்பட்டினத்தில் பணியாற்றி வந்த தோழர். V. முருகாண்டி, TM நெல்லை ஷீபா மருத்துவமனையில் வைத்து 14-03-2016 இன்று காலை மரணமடைந்தார். அன்னாரின் மரணச் செய்தி கேட்டு வருந்துகிறோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இறங்கலை தெரிவிக்கிறோம்.

             அன்னாரின் இறுதி சடங்குகள்  நாளை 15-03- 2016 அன்று காலை 0900 மணி அளவில் தியாகராஜநகரில் உள்ள வீட்டில் வைத்து நடைபெறும் என தெரியவருகிறது.

 • FORUMத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

  10-03-2016 ல் மத்திய சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவாகவும் BSNLஐ பலப்படுத்தவும், ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் FORUM சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

   

                 23 பெண்கள்  உட்பட 97 தோழர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் FORUMத்தின் தலைவர் தோழர். I. லிங்கபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி தோழர். சுரேஷ்காந்தி, SEWA. தோழர். M. பாலக்கண்ணன்,  NFTE BSNL, தோழர். மரிய அந்தோணி பிச்சை, SNEA, தோழர். C. செல்லத்துரை, FNTO, தோழர். M. ஜெயமுருகன் , BSNLEU பேசினர்.

            ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து FORUMத்தின் பொருளாளர் தோழர். P. பால்ராஜ் பட்டுகுமார் நன்றி கூறினார்.

 • FORUM சார்பில் ஆர்ப்பாட்டம்.

  10-03-2016 ல் மத்திய சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவாகவும் BSNLஐ பலப்படுத்தவும், ஊழியர்களின் உரிமைகளுக்காகவும் FORUM சார்பில் ஆர்ப்பாட்டம்.

           நாட்டை சீரழித்து வரும் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், அரசின் நாசகர கொள்கைகளான பங்கு விற்பனை, தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திடும் தேசிய எதிர்ப்பு தின இயக்கத்தோடு நமது BSNLலில் வரவேண்டிய  USO FOUND ரூபாய் 1250 கோடியை உடனே வழங்கிடக் கோரியும், அடிப்படை  சம்பளத்தில் கணக்கிட்டு ஓய்வு கால சம்பளப் பிடித்தம் செய்திடக் கோரியும், காலதாமதமாகும் ஓய்வூதியர்களின் 78.2 சத பஞ்சப்படி இணைப்பை வழங்கிடக் கோரியும் FORUMத்தின் சார்பில் 10-03-2016 கண்டன ஆர்ப்பாட்டம்.

  [Read More…]

 • சர்வதேச மகளிர் தினம்.

  FB_IMG_1457398976733இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

   

            உலக மக்களில் சரிபாதி பெண்கள் என்ற நிலையில் உலகை வளமாக்க, வடிவமைக்க, புதிய தலைமுறையை உருவாக்க என்ற பல நிலைகளில் பெண்களின் பங்கு மகத்தானது. பெண்களின் உழைப்பை சுரண்டிடும் நிலையை மாற்றிடவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் சபதமேற்போம். பெண்களின் திறனை மதித்திடும் வகையில் உலக பெண்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.

 • மாவட்டச் செயற்குழுக்கூட்டம் – கோவில்பட்டியில்

  05-03-2016 ல் கோவில்பட்டியில் BSNLEU மாவட்டச் செயற்குழு கூட்டம்.

    கோவில்பட்டி தொலைபேசி நிலைய  வளாகத்தில் வைத்து 05-03-2016 அன்று காலை 1000 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

            BSNLEU மாநில அமைப்புச்செயலர் தோழர். R.M . கிறிஸ்டோபர் மாவட்டச் செயற்குழுவை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்ற உள்ளார். BSNLEU மாநில உதவிச்செயலர் தோழர். V. P. இந்திரா சிறப்புரை ஆற்ற உள்ளார்.

             மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் மாவட்டச் செயலர் வேண்டுகிறார்.