• மேதின வாழ்த்துக்கள்.

  மே தின நல் வாழ்த்துக்கள்.

  இன்னும் நிறைவேறாத தொழிலாளி வர்க்கத்தின் கனவுகள்.

  சிகாகோ தியாகிகள்

  சிந்திய குருதியில்

  நெருப்பு மலரென பூத்த

  உழைப்பாளர் தினமே மேதினம்.

   

            8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் என்கிற மே தினத்தின் முழக்கங்கள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன. அனைவருக்கும் கிடைத்திட கேட்டு சிக்காக்கோ வீதியில் போராடி இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினவைப் போற்றுவோம்.

  130 வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.

 • வெற்றிக்கு கட்டியம் கூறும் தேர்தல் சிறப்புக் கூட்டம்.

  முத்து நகரில் முத்தாய்ப்பாக நடைபெற்ற 7வது சங்க அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டம்.

              7வது சங்க அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டம் இன்று 28-04-2016 மாலை 0400 மணி அளவில் தூத்துக்குடி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். T.சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர். P. பால்ராஜ் பட்டுக்குமார் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

          BSNLEU மாநில உதவிச் செயலர் தோழர். S.சுப்பிரமணியன், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். R.M. கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

         SEWABSNL மாவட்டத்தலைவர் தோழர். R.தனசேகரன், BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M.ஜெயமுருகன், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினர்.

               மாவட்டப் பொருளாளர் தோழர். C. பன்னீர் செல்வம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 • தேர்தல் சிறப்புக் கூட்டம் முத்துநகரில்

  தேர்தல் நாள் : 10-05-2016

  வரிசை எண் : 9CELL PHONE SYMBOL

  7வது சங்க அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டம்

  நாள் : 28-04-2016 வியாழக்கிழமை மாலை 0330 மணி அளவில்

  இடம் : தொலைபேசி நிலைய வளாகம், தூத்துக்குடி

  தலைமை :

  தோழர். T.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர், BSNLEU.

  வாழ்த்துரை :

  தோழர். R. தனசேகரன், மாவட்டத் தலைவர், SEWABSNL.

  தோழர். P. ராமர், மாவட்டச் செயலர், AIBDPA.

  சிறப்புரை :

   தோழர். S. சுப்பிரமணியன்,

  மாநில உதவிச் செயலர், BSNLEU

  தோழர். S. சுரேஷ் காந்தி,

  மாவட்டச் செயலர், SEWABSNL.

  தோழர். R.M. கிறிஸ்டோபர்,

  மாநில அமைப்புச் செயலர், BSNLEU.

  அனைவரும் பங்கேற்போம் !

  தேர்தல் சிறப்புக் கூட்டத்தை வெற்றிக்கரமாக்குவோம் !!.

  இவண்

  BSNLEU, SEWABSNL, SNATTA

 • துர்முகி தமிழ் வருடப் பிறப்பு / அண்ணல் அம்பேத்கார் 125வது பிறந்த தினம்.

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மற்றும்

  சமூகநலப் போராளிஅண்ணல் அம்பேத்கார் 125வது பிறந்த தினம்.

   

  அண்ணல் அம்பேத்கார் 125வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கோவில்பட்டி கிளை  அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடியது.

 • எழுச்சியாக நடைபெற்ற நெல்லை தேர்தல் சிறப்புக் கூட்டம்.

         BSNLEU தேர்தல் சிறப்புக் கூட்டம் நெல்லையில் இன்று 13-04-2016 மாலை 0400 மணி அளவில் நெல்லை GM அலுவலகத்தில் தோழர். C. சுவாமிகுருநாதன் தலைமையில் துவங்கியது. மாவட்டச் செயலர் தோழர்.K. சூசை மரிய அந்தோணி வரவேற்றார்.

  மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா எழுச்சியுரை ஆற்றினர். பிரமாண்டமான கூட்டத்தின் சிறப்புரையாக தோழர் P. அபிமன்யூ உரையாற்றினார்.

 • BSNLEU தேர்தல் சிறப்புக் கூட்டம் நெல்லையில்

  7வது சங்க அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டம்  நெல்லையில்

  நாள் : 13-04-2016 புதன்கிழமை மாலை 0300 மணி அளவில்

  இடம் : தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம், வண்ணார்பேட்டை, நெல்லை .

  தலைமை : தோழர். C.சுவாமி குருநாதன், மாவட்டத் தலைவர், BSNLEU, TVL.

  வரவேற்புரை :

  தோழர். N. சூசை மரிய அந்தோணி, மாவட்டச் செயலர், BSNLEU, TVL.

  முன்னிலை :

  தோழர். V.P. இந்திரா, மாநில உதவிச் செயலர், BSNLEU

  வாழ்த்துரை :

  தோழர். M. ஜெயமுருகன், மாவட்டச் செயலர், BSNLEU, TT.

  தோழர். S. தர்மராஜ், மாவட்டத் தலைவர், SEWABSNL TVL

  தோழர். K. ஜார்ஜ், மாவட்டச் செயலர், BSNLEU, NGC

  தோழர். K. ராஜேந்திரன், மாவட்டச் செயலர், SEWABSNL, TVL

  தோழர். K. ரவீந்திரன், மாவட்டச் செயலர், BSNLEU, VGR

  சிறப்புரை :

   தோழர். P. அபிமன்யூ, பொதுச்செயலர், BSNLEU

  எழுச்சியுரை :

  தோழர். S. செல்லப்பா,

  அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர்,  BSNLEU

  தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன்,

  மாநிலச் செயலர், BSNLEU

  நன்றியுரை :  V.சீதாலெட்சுமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, நெல்லை.

 • தூத்துக்குடியில் எழுச்சியாக நடைபெற்ற தார்ணா

  PLIயில் போடப்பட்ட மோசமான பரிந்துரையைக் கண்டித்து தார்ணா

             தூத்துக்குடியில் இன்று 07-04-2016ல் PLIயில் போடப்பட்ட மோசமான பரிந்துரையைக் கண்டித்து நடைபெற்ற தார்ணாவில் மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன், மாநில அமைப்புச் செயலர் தோழர். R.M. கிறிஸ்டோபர் ஆகியோர் பேசினர்.125க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணா போராட்ட முடிவில் GMO கிளைச் செயலர் தோழர். K.ஹரி ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 • நாடு தழுவிய தார்ணா 07-04-2016

  30-03-2016ல் PLI யில் செய்யப்பட்ட மோசமான உடன்பாட்டைக் கண்டித்து 07-04-2016ல் நாடு தழுவிய தார்ணா

  IMG-20160405-WA0003

  போனஸ் என்பது இனாமல்ல! கொடுபடா ஊதியம்…

  கேலிக்கூத்தை அனுமதியோம்-

  07.04.2016 அன்று காலை 10 மணி முதல்  மாலை 0500 மணி வரை மாவட்ட தலைநகரான தூத்துக்குடியில் தொலைத் தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெறும்.

 • ஆப் கி பார் மோடி சர்க்கார் ( பங்குச் சந்தையில் போட்டது குறைஞ்சதடி கண்ணம்மா)

  ஆப்பு வைக்குது பார் மோடி சர்க்கார்

  அத்தக் கூலி உட்பட அனைத்து தொழிலாளியும் நாள் முழுவதும் இரத்தம் சுண்ட சம்பாரிச்ச பணத்தில் 12.5% பி.எப். பிடிக்கப்படுது.

  இந்தப் பணத்தை பங்கு சந்தையில போட்டு பங்கு சந்தையை தூக்கி விட மோடி அரசு முடிவு செஞ்சுது.

  சூதாட்ட சந்தையிலே போடாதேன்னு சிஐடியு, ஐஎன்டியுசி போன்ற தொழிற்சங்கங்கள் எதிர்த்தன.

  பங்கு சந்தையில் பெரும் திமிங்கலங்கள் விரைவாக லாபம் சம்பாதிக்க தொழிற்சங்க எதிர்ப்பையும் மீறி பி.எப் பணம் ரூபாய் 5920 கோடியை ஆகஸ்டு 2, 2015 போய் போட்டானுங்க BJP மகராஜங்க..

  பிப் 29 தேதி, அதாவது 6 மாதத்தில் அதன் மதிப்பு என்ன தெரியுமா? 5355கோடி ரூபாய்.

  6 மாத்தில் 565 கோடி ரூபாய் புஸ்வானம்.

  ஆறு மாதத்தில் 9.54% இழப்பு!

  ரிட்டயர்ட் ஆகும் போது பைனாஸ் கம்பெனிகள் மாதிரி ஒன்னுமில்லேன்னு சொல்லிடுவான்களோ…!!!

  தொழிலாளிக்கு எப்படி ஆப்பு வைச்சோம் பாத்தியா.

  “இதுக்கு பேர்தான் ஆப் கி பார் மோடி சர்க்கார்”

  (தகவல் சிஐடியு அகில இந்தியத் தலைவர் நமது அன்புத் தோழர் ஏ.கே.பத்மநாபன் முகநூல் பக்கத்திலிருந்து)

 • சொன்னால் வெட்கம் ! சொல்லாவிட்டால் துக்கமா ?

  வெளியில் சொல்ல வெட்கம் ஏனோ ?

                30-03-2016 அன்று PLI ( PRODUCTIVITY LINKED INCENTIVE ) கமிட்டி கூட்டம் நடக்கப் போவதாக BSNL நிர்வாகம் ஒரு நாளைக்கு முன்பாக தெரிவித்தது . மிக மிக குறுகிய கால அவகாச கால அறிவிப்பாக இருப்பதாலும் ஏற்கனவே 30-03-2016 அன்று குஜராத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கலந்து கொள்ள இயலாது என்றும் எனவே இன்னொரு தேதியில் நடத்தலாம் என்று நமது சங்கம் கேட்டுக்கொண்டது. ஆனாலும் நமது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் அவசரம் அவசரமாக – தன்னிச்சையாக – 30 03 2016 அன்று கூட்டத்தை நடத்தியுள்ளது.

             மொத்தத்தில் கமிட்டியில் இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே என்பதும் அதில் பிரதான தொழிற்சங்கத்தை சார்ந்த பிரதிநிதி, அதுவும் STAFF SIDE SECRETARY வராமல் தான் மட்டும் கலந்து கொள்வது சரியல்ல என்பது குறைந்த பட்ச தொழிற்சங்க அறிவு உள்ள யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

           ஆனால், NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹமது மட்டும் தன்னந்தனியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை ( ? ) நடத்தியுள்ளார். ஒரு மாத கால அறிவிப்பு இல்லாத காரணத்தால் நமது சங்கம் கலந்து கொள்ள வில்லை என்று கோயபல்ஸ் பிரச்சாரமும் செய்துள்ளார். இதன் மூலமே ஒரு துரோகம் செய்ய NFTE பிரதிநிதி திருவாளர் இஸ்லாம் அஹ்மது முடிவு செய்துள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

               கூட்டத்தில் 2014 – 15 ஆண்டிற்கு ஒரு அற்பத்தொகையை PLI ஆக BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகக் குறைவு என்று கருதினாலும் அதை தான் எதிர்க்கவில்லை என்று திரு. இஸ்லாம் அகமது தெரிவித்துள்ளார். கமிட்டி தன்னுடைய பரிந்துரையை உரிய இடத்தில் முடிவிற்காக சமர்ப்பிக்கும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.

            அற்பத்தொகை எவ்வளவு என்று இதுவரை அவர் தெரிவிக்க வில்லை. நமது சங்கம் PLI தொகை இரண்டு இலக்க அற்பத்தொகை என்று அறிந்து எதிர்ப்பு தெரிவித்த்துடன் போராட்ட்த்தையும் அறிவித்த பிறகு, NFTE பிரதிநிதி 31-03-2016 அன்று பல்டி அடித்து அந்த தொகையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார்.
  கடைசி வரை அந்தத் தொகை எவ்வளவு என்று அவர் தரப்பில் தெரிவிக்கவில்லை. உண்மையைத் தெரிவிக்கவும் அவர் தயாராக இல்லை. வெளியில் சொல்ல வெட்கப்பட்டு MINUTES வந்த பிறகு தெரியும் என்று கூனிக் குறுகி பேசி வருகின்றார். மாட்டு வியாபாரிகள் துண்டைப் போட்டு வெளியில் தெரியாமல் தொகையை பேரம் பேசுவது போல் நிர்வாகத்துடன் பேரம் நடந்துள்ளது.

  ஏன் இந்த அவல நிலை ?

              பொறுப்புள்ள எந்த தொழிற்சங்கமும் இத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ளாது.
  ஊழியர் நலனுக்கு எதிராக ரகசிய பேரம் பேசும் இத்தகைய போக்கை NFTE சங்க உறுப்பினர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.