• புரட்சி நாயகன் ஃபிடல் கேஸ்ட்ரோ மறைவு

  கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு

  img-20161127-wa0011

              சோசலிசத்தை சாத்தியமாக்கிய மாவீரன், உலக புரட்சியாளன் கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் அலஜாண்ட்ரோ காஸ்ட்ரோ (1926-2016) தமது 90வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார். தனது கூட்டாளி சேகுவேராவுடன் இணைந்து கொரில்லா போர்முறையின் மூலம் ஆயுதம் ஏந்தி பாடிஸ்டா இராணுவ சர்வாதிகாரத்தை ஒழித்து பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிறுவிய தோழன்.

            அமெரிக்காவிற்கு கடந்த 50 ஆண்டுகளாக சிம்ம சொப்பனமா கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.  638 முறை அமெரிக்க உளவுத் துறையால் கொல்ல முற்பட்டபோதும் அனைத்திலும் தப்பிய தோழன் காஸ்ட்ரோ. உலகில் நீண்ட காலமாக 1959 முதல் 1976 வரை கியூபா பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை கியூபா அதிபராகவும் பதவி வகித்தார்.

     1. 12 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவை கல்வி, சுகாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்தவர் தோழர். காஸ்ட்ரோ.

           அவர் தம் மறைவால் துயருரும் கியூபா மக்களுக்கும் அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தூத்துக்குடி மாவட்டச் சங்கம் தெரிவிக்கிறது.

 • மாபெரும் தார்ணா – துணை டவர் கம்பேனி அமைக்கும் முடிவை எதிர்த்து

  வெற்றிகரமாக நடைபெற்ற நாடு தழுவிய தார்ணா

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

               துணை டவர் கம்பேனி அமைக்கும் முடிவை கைவிடக்கோரி இன்று 25-11-2016 தூத்துக்குடி GM அலுவலகம் முன்பு BSNL அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன் சார்பில் மாவட்டத் தலைவர் தோழர். ஐ. லிங்க பாஸ்கர் தலைமையில் தார்ணா நடைபெற்றது.

             போராட்டத்தை விளக்கி BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.M. ஜெயமுருகன், NFTE BSNL மாவட்டச் செயலர் தோழர்.M.பாலகண்ணன், SNEA மாவட்டச் செயலர் தோழர். மரிய அந்தோணி பிச்சை, BSNLEA மாவட்டச் செயலர் தோழர்.A.சரவணன்,  BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். R.M. கிறிஸ்டோபர், தோழர். S. பாலு  உட்பட பல தோழர்கள் பேசினர்.