• புத்தாண்டு 2017 வாழ்த்துக்கள்

  ஷூதோழர்கள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு 2017 வாழ்த்துக்கள்.

  img-20161231-wa0094

  இந்த புத்தாண்டு எல்லா வளங்களுடன் அன்பையும், சகோதரத்துவத்தையும் கொண்டு வர வாழ்த்துகிறோம் !

 • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


  images-2

  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

   

   

 • நெல்லையில் சிறப்பு கருத்தரங்கம்

  K.G.போஸ் நினைவு தினமும், BSNLEU-8வது அகில இந்திய மாநாடும்…

  fb_img_1482258177001fb_img_1482258193138fb_img_1482258207877

            நமது BSNLEU தமிழ் மாநில சங்க முடிவின் அடிப்படையில் 17-12-16 அன்று  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டசங்கங்கள் இனைந்து திருநெல்வேலி GM அலுவலகத்தில் வைத்து சிறப்பு கருத்தரங்கத்தை மிகவும் சிறப்பாக நடத்தின….

             தோழர்கள் S. சுப்பிரமணியன் BSNLEU மாநில உதவி செயலர் திருப்பூர் மற்றும் LIC கோட்டச் செயலர் MKS நெல்லை ஆகியோர் சிறப்புரையாற்றுனர்.  திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டச் சங்க தலைவர்கள், செயலர்கள், மாநில பொறுப்பாளர்கள் தோழர்கள் RM கிறிஸ்டோபர் & சுவாமி குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
  இரு மாவட்டச் சங்க தோழர்களும் பெறுவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 • வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !

  facebook_1481710582899

  அரசின் துணைடவர் கம்பேனி அமைக்கும் முடிவை எதிர்த்து வேலைநிறுத்தம் நடைபெறும்.

              BSNLன் உயிர்நாடியாம் மொபைல் டவர்களை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தோடு மத்திய அரசு துணை டவர் நிறுவனம் அமைப்பதை கைவிடக்கோரி 2016 டிசம்பர் 15ல் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்திட BSNL அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் சார்பில்  அறைகூவல் விடப்பட்டுள்ள நிலையில்

            இன்று 14-12-2016 மாலை DOT ADD. SECYயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடரும் என BSNL அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் உறுதியாக வேலைநிறுத்தம் செய்வோம் ! பிஎஸ்என்எல்ஐ பாதுகாப்போம் !!

   

 • தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு

  ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார்.

  jayalalitha5657-06-1480964988

  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நீண்ட காலமாக தமிழக முதல்வராகவும் இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 05-12-2016 நேற்று இரவு 11.30 காலமானார்.

            அவர் தம் பிரிவால் வாடும் அதிமுகவினருக்கும் பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.