• உற்சாகமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

  16-03-2017 அன்று  நடைபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி BSNL மாவட்ட அலுவலகம் முன்பு BSNLEU மாவட்டத்தலைவர் தோழர். S. பால்ராஜ் பட்டுக்குமார் தலைமையில்  BSNLEU, TNTCWU, AIBDPA சங்கத்தோழர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M. ஜெயமுருகன்,  AIBDPA மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் பேசினர். GM அலுவலக கிளைச் செயலர் தோழர். K. ஹரி ராமச் சந்திரன் நன்றிகூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்

  Jpeg

  Jpeg

 • மத்தியச்சங்கம் அறைகூவல் – ஆதரவு இயக்கம்நடத்திட

  மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2017 மார்ச்16.

  BSNLEU மத்தியச்சங்கம் தார்மீக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அறைகூவல். 

  அடிப்படை ஊதியத்தை  ரூபாய் 21000/- மாக மாற்றி அமை !

  01-01-2016 முதல் புதிய பார்முலாவின்படி வீட்டுவாடகைப்படி, பயணப்படி முதலியவற்றை வழங்கிடு !

  அஞ்சல் பகுதியில் 2.5லட்சம்   ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்து !

  உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 16 மார்ச் 2017ல்  மத்திய அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்துள்ளனர். 

  வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு இயக்கம் நடத்திட மத்தியச்சங்கம் அறைகூவல் விட்டுள்ளதால் அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !

 • உற்சாகமாக நடைபெற்ற பேரணி

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  தூத்துக்குடியில் BSNLஐ பாதுகாக்க பேரணி – சார்ஆட்சியரிடம்  மனு அளிப்பு.

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்தை தொடர்ந்து பொதுத்துறையாக பாதுகாத்திட BSNL ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்கள் (BSNLEU, NFTE BSNL, SNEA மற்றும் AIBDPA,TNTCWU) பேரணி தூத்துக்குடியில் இன்று 09-03-2017 மாலை 03.30மணி அளவில் தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் தொடங்கி தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. SNEA மாவட்டச்செயலர் தோழர். D. மரிய அந்தோனி பிச்சையா தலைமை வகித்தார். BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M. ஜெயமுருகன், NFTE BSNL மாவட்டச்செயலர் தோழர். M.பாலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். கோரிக்கை  மனுவை மாவட்ட சார்ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.  

 • நாடு தழுவிய பேரணி – ஆளுநர் / மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு.

  2017 மார்ச் 9 ல் BSNL அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் ஆட்சியரிடம் மனு அளிக்கும்  நாடு தழுவிய பேரணி.

  ♦BSNL நிறுவனத்தின் பங்குகளை கேந்திரவிற்பனை செய்வதற்கும், தனியார் மயமாக்குவதற்கும் “நிதி ஆயோக்” அளித்துள்ள பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இந்திய பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளதைக் கண்டித்தும் !

  ♦       BSNL நிறுவனத்தின் 63000 டவர்களை பிரித்து துணை டவர் நிறுவனம் அமைப்பதை கைவிட !!

  ♦      அரசு பொதுதுறையான BSNL நிறுவனத்திற்கு கட்டணமின்றி 4G அலைக்கற்றை வசதியை வழங்கிட !!!

  ♦ரிலையன்ஸ் ஜியோ என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் கண்மூடித்தனமான ஆதரவையும் சலுகைகளையும் உடனே நிறுத்திட !!!!

     கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL நிறுவனத்தின் அதிகாரி ஊழியர் சங்கங்கள் மார்ச் 9, 2017ல் மாநில ஆளுநர் / மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாக சென்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

         தூத்துக்குடியில் 09-03-2017 மாலை 03.30மணி அளவில் பேரணியை தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் தொடங்கி தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் வரை நடத்துவது என்றும் கோரிக்கை  மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க  இருப்பதாலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

 • சர்வதேச மகளிர்தினம் – வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

  images (1)

   

  பெண்கள் தினத்தை அல்ல…. 
  பெண்களை கொண்டாடுவோம்…..
  சர்வதேச பெண்கள் தினத்தில் !!