• மே தின வாழ்த்துக்கள் !

  சபதம்ஏற்போம்….. ! 

  அனைத்துப்பகுதி உழைப்பாளிகளின் சலுகைகளை உரிமைகளை பாதுகாத்திட…. !

  விவசாயி / விவசாய தொழிலாளர்கள் வாழ்வை சீரழிப்பதை தடுத்திட….. !

  ஏழைகளின் கல்வியை கேள்விகுறியாக்கி நடைபெறும் கல்வி வியாபாரத்தை தடுத்திட……!  

  கொள்ளை போகும் கனிமவளத்தை  பாதுகாத்திட…. !

  தாண்டவமாடும் சாதிவெறி / மதவெறியை தடுத்திட…….!  

  பொதுதுறைகளை பாதுகாத்திட……. !

  இந்த மே தினத்தில் சபதம்ஏற்போம்….. ! 

  அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள் .

 • தமிழக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

  Jpeg

  விவசாயிகளின்  போராட்டத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  இன்று 25.04.2017ல் தூத்துக்குடியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகளும், CITU, AITUC, LDF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களும் தமிழக அமைப்புசாரா சங்கங்களும் விவசாய சங்கங்களும் நடத்திடும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக BSNLEU, NFTE, AIBDPA, TNTCWU இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தை விளக்கி தோழர்கள். M.ஜெயமுருகன் (BSNLEU), M.பாலகண்ணன்(NFTE) பேசினர்.

 • தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய தமிழ் (ஹேவிளம்பி) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 • உற்சாகமாக நடைபெற்ற தார்ணா

  உற்சாகமாக நடைபெற்ற தார்ணா

  மத்திய அரசும் BSNL நிர்வாகமும் CGM அலுவலகமும் உயர் ஊதியம் வழங்கிட உத்தரவிட்டும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய உயர் ஊதியத்தை   வழங்காமல் காலம் தாழ்த்தும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து BSNLEU & TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களும் இணைந்து 06.04.2017 இன்று காலை 1000 மணி முதல் தார்ணா போராட்டம் நடைபெற்றது. BSNLEU மாவட்டத்தலைவர் தோழர். S. பால்ராஜ் TNTCWU  மாவட்டத்தலைவர் தோழர். C.பன்னீர் செல்வம் கூட்டு தலைமையில் தார்ணா நடைபெற்றது.

   போராட்டத்தை விளக்கி BSNLEU மாவட்டசெயலர் தோழர்.M.ஜெயமுருகன் மற்றும் TNTCWU மாவட்டசெயலர் தோழர் E.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர். ரா.மெ.கிறிஸ்டோபர் சிறப்புரை நிகழ்த்தினார். AIBDPA மாவட்டச்செயலர் தோழர். P. ராமர் மற்றும் மாவட்டச் சங்க, கிளைச் சங்க  நிர்வாகிகளும் தார்ணாவை வாழ்த்தி பேசினர்.

  Jpeg

  Jpeg

  Jpeg

   

   

   

   

   

 • ஊதிய உயர்வை அமுல்படுத்திடக் கோரி தார்ணா போராட்டம் 06-04-2017

  தார்ணா போராட்டத்தில் பங்கெடுப்போம் !

  வெற்றிபெறுவோம் !!

  அன்புத் தோழர்களே ! தோழியரே !!

       மத்திய அரசும் BSNL நிர்வாகமும் CGM அலுவலகமும் உயர் ஊதியம் வழங்கிட உத்தரவிட்டும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய புதிய உயர் ஊதியத்தை   வழங்காமல் காலம் தாழ்த்தும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து BSNLEU & TNTCWU இரண்டு மாவட்ட சங்கங்களும் இணைந்து 06.04.2017 அன்று தார்ணா போராட்டம் நடத்திட உள்ளன . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் அன்றைய தினம்  தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெரும் தார்ணாவில் பங்கெடுக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  GM அலுவலக் கிளையில் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் 06.04.2017 அன்று பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துள்ளார்கள் .

 • வெற்றிகரமாக நடைபெற்ற கவன ஈர்ப்பு தினம் ஏப்ரல் 5 2017

  கவன ஈர்ப்பு தினம் ஏப்ரல் 5 2017.

  Jpeg

  தூத்துக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பு மதியம் 0100மணி அளவில் அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் தோழர். I. லிங்கபாஸ்கர் தலைமையில் கவன ஈர்ப்பு தினம் ஏப்ரல் 5 2017 நடைபெற்றது.

  போராட்டத்தைவிளக்கி SNEA மாவட்டச் செயலர் தோழர். மரிய அந்தோணி பிச்சை, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன் பேசினர். BSNLEU கிளைச் செயலர் தோழர். K. ஹரி ராமச்சந்திரன் நன்றி கூறினார். ஓய்வூதியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

 • கவன ஈர்ப்புதினம் – 05.04.2017

  கவன ஈர்ப்புதினம் – 05.04.2017

  கோரிக்கைகள் :-

  1) BSNL ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு 1.1.2017 முதல் ஊதியமாற்றம் செய்திடுக!
  2) 1.1.2017 முதல் ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்திடுக!
  3) நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமலாக்கிடுக!
  4) வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை கணக்கிடுக !

  15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் அணிய இருக்கும் அட்டையில் இடம்பெற வேண்டிய வாசகங்களின் தமிழாக்கம் மேலே  கொடுக்கப்பட்டுள்ளது.

  அதற்கான தயாரிப்பு பணிகளில் கிளை செயலாளர்கள்  உரிய கவனம்  செலுத்தி போராட்டம் வெற்றிபெறச்  செயதிட வேண்டுகிறோம். 

  ஒன்றுபட்டு போராடுவோம் ! வெற்றி பெறுவோம்.!!

 • பஞ்சப்படி குறைப்பு 01-04-2017 முதல் 2.3 சதம்.

  பஞ்சப்படி குறைவு 01-04-2017 முதல் 2.3 சதம்.

   

  01-04-2017 முதல் பஞ்சப்படி (IDA) 2.3 சதம் குறைந்து மொத்தம் 117.2 சதமாக இருக்கும் என தெரியவருகிறது.