• இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய ரம்ஜான்   வாழ்த்துக்கள்.

 • ஊதிய உயர்வு தார்ணா போராட்டம்

  20-06-2017 வெற்றிகரமாக நடத்த அனைத்து சங்கங்களின்   கூட்டமைப்பு அறைகூவல்.

  உரிமைகளை மீட்டிட ஒன்றுபட்டு போராடுவோம்.

 • உரிமைகளை மீட்டெடுக்க போராட தயாராவோம் ! BSNL சங்கங்கள் அறைகூவல் !

  நிர்வாகத்தின் அடக்குமுறையினை எதிர்த்தும் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் களம்காண போராட்ட திட்டங்கள் அறிவிப்பு.

                    02.06.2017 டெல்லியில் கூடிய BSNL ஊழியர்  மற்றும் அதிகாரிகளின்   சங்கத் தலைவர்கள் ஏக மனதாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத் திட்டங்களை வடிவமைத்தனர்.  மேலும் BSNL அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்ட நடவடிக்கைகளை தடைசெய்ய டெல்லி பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில் BSNL கார்ப்போரேட் நிர்வாகம் கடந்த 06.05.2017 அன்று தடைஆணை பெற்று அனைத்து மாநில பொது மேலாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக கடந்த 08.05.2017 வெளியிட்ட கடிதத்தையும் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. 

  கோரிக்கைகள்:-

  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……

  இயக்கங்கள் :-     

   A) 20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

  B) 13-07-2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

  C) 27-07-2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.

           இயக்கங்களை வெற்றிகரமாக்கி ஊதிய மாற்றம் பெற்றிட

  கரம் கோர்ப்போம் !

  களம் காண்போம் !!

   இயக்கங்கள் நடத்தி வெற்றி பெறுவோம் !!!

 • கிளைகளில்கண்டன ஆர்ப்பாட்டம்

  மேமாத சம்பளம் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

              உரிய தேதியில் நிரந்தர ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் தமிழ் மாநிலச் சங்க அறைகூவலின் படி தூத்துக்குடியில் 01-06-2017 மதியம் 0100 மணிக்கு மாவட்டத்தலைவர் தோழர். S. பால்ராஜ் பட்டுக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். M. ஜெயமுருகன் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.

  கோவில்பட்டி கிளை ஆர்ப்பாட்டம்

  திருச்செந்தூர் கிளை ஆர்ப்பாட்டம்