• ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம்.

  BSNL அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியர்களால்  தமிழகம்  முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம்.

     BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் AIBDPA சார்பில் இன்று 13.07.2015 மாபெரும் உண்ணாவிரதம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து  நாடு தழுவிய  அளவில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நமது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள்  உற்சாகமாக   கலந்து கொண்டனர்.

  கோரிக்கைகள்:-
  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட் அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி……

  Jpeg

  Jpeg

  Jpeg

 • ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்

  01-01-2017 முதல்    ஊதியம் / ஓய்வூதியம் வழங்கக்கோரி 13.07.2017ல் நாடுதழுவிய உண்ணாவிரதம்.

          BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஊதிய / ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2வது கட்ட போராட்டம் 13.07.2017ல்  நாடு தழுவிய உண்ணாவிரதம். அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். மாவட்டச்செயலர்கள் உரிய கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.

 • அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்

  உற்சாகமாய் நடைபெற்ற  முதலாவது அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம்.

       அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் கருத்தரங்கம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக அரங்கில் 08.07.2017 அன்று  உற்சாகமாக நடைபெற்றது. BSNLEU அகில இந்திய தலைவர் தோழர். பல்பீர்சிங், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். சுனில்  சௌத்திரி, தோழர். பாக்கியலெட்சுமி (கேரளா), தோழர். சர்மிளா தத்தா (கொல்கத்தா), தோழர். P. பிரேமா (தமிழ்நாடு) தோழர். பத்மாவதி (ஹைதராபாத்) கூட்டு தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பான ஏற்பாடுகளை தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலச்சங்கங்கள்  செய்திருந்தன. தெலுங்கானா மாநிலச்சங்க செயலர் தோழர். சம்பத்ராவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

        CITU மாநிலத் தலைவர் தோழர். ஹேமலதா கருத்தரங்கை துவக்கிவைத்து  துவக்க உரையாற்றினார். CITU மாநில துணைத் தலைவர் தோழர். ரமாதேவி, ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைகழக முன்னாள் முதல்வர் உஷாதேவி, BSNLEU அகில இந்திய பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

         இந்த கருத்தரங்கில் அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் கன்வீனராக அருமை தோழர். P. இந்திரா  ( BSNLEU தமிழ் மாநில உதவிச் செயலர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.